பிரியாணி, சிக்கன் தரணும்; அங்கன்வாடியில் அடம்பிடித்த குழந்தை - அரசு பரிசீலனை!

Kerala
By Sumathi Feb 04, 2025 05:42 AM GMT
Report

அங்கன்வாடியில் பிரியாணி, சிக்கன் வழங்க வேண்டும் என்று கேட்கும் குழந்தையின் வீடியோ வைரலாகி வருகிறது.

குழந்தை கோரிக்கை

கேரளாவில் அங்கன்வாடியில் படிக்கும் குழந்தை ஒன்று உப்புமாவுக்கு பதிலாக பொரித்த கோழி, பிரியாணி தாங்க என கோரிக்கை விடுத்த வீடியோ இணையத்தில் வைரலானது.

பிரியாணி, சிக்கன் தரணும்; அங்கன்வாடியில் அடம்பிடித்த குழந்தை - அரசு பரிசீலனை! | Kid Request For Chicken Fry Kerala Anganwadi

இதனை சுகாதாரம், பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை மாநில அமைச்சர் வீணா ஜார்ஜ் தனது பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அமைச்சர் வெளியிட்டுள்ள வீடியோவில், குழந்தை அப்பாவித்தனமாக கோரிக்கை விடுத்துள்ளான். அங்கன்வாடியின் மெனு திருத்தப்படும்.

பிரதமர் மோடி பாதுகாப்பு - ஒரு மணி நேரத்திற்கு ரூ.5.58 லட்சம்!

பிரதமர் மோடி பாதுகாப்பு - ஒரு மணி நேரத்திற்கு ரூ.5.58 லட்சம்!

அரசு பரிசீலனை

குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து நிறைந்த உணவை உறுதி செய்வதற்காக அங்கன்வாடிகள் மூலம் பல்வேறு வகையான உணவுகள் வழங்கப்படுகின்றன. இந்த அரசாங்கத்தின் கீழ், அங்கன்வாடிகள் மூலம் முட்டை மற்றும் பால் வழங்கும் திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு உள்ளது.

kerala anganwadi

பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறையுடன் ஒருங்கிணைந்து, உள்ளாட்சி அமைப்புகள் அங்கன்வாடிகளில் பல்வேறு வகையான உணவுகளை வழங்குகின்றன எனக் குறிப்பிட்டுள்ளார்.