நோயாளிகளுக்கு தேவையற்ற மருந்து ; 17 பேர் பலி - செவிலியருக்கு 760 ஆண்டு சிறை தண்டனை!

Crime Death Pennsylvania
By Swetha May 04, 2024 09:57 AM GMT
Report

நோயாளிகளுக்கு தேவையற்ற சிகிச்சை கொடுத்து கொன்ற செவிலியருக்கு 760 ஆண்டு சிறை தண்டனை உத்தரவிடப்பட்டுள்ளது.

நோயாளிகள் பலி 

பென்சில்வேனியா நாட்டை சேர்ந்தவர் செவிலியர் ஹீதர் பிரஸ்ட்(41). இவர் 3 ஆண்டுகளில் ஐந்துக்கும் மேற்பட்ட முதியோர் மறுவாழ்வு மையங்களில் செவிலியராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் இவர் பணியாற்றி வரும் மறுவாழ்வு மையங்களில் மர்மமாக தொடர்ந்து 17க்கும் அதிகமான நோயாளிகள் உயிரிழப்பது,

நோயாளிகளுக்கு தேவையற்ற மருந்து ; 17 பேர் பலி - செவிலியருக்கு 760 ஆண்டு சிறை தண்டனை! | Nurse Get Judgement For Killing Patients

அடிக்கடி முதியோர்கள் உடல் நலம் பாதிக்கப்படுவது போன்ற சம்பவங்கள் நடந்திருக்கிறது. இறந்தவர்கள் அனைவரும் 43 முதல் 104 வயதுடைய முதியோர்கள் என்பதால். சக செவிலியர்கள் இதனை பெரிதாக கண்டுகொள்ளவில்லை.

ஆனால் செவிலியர் ஹீதர் பிரஸ்டீ நோயாளிகளிடம் கடுமையாக நடந்து கொள்வதை பார்த்த சக செவிலியர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அதன்படி, அவரிடம் விசாரணை செய்தபோது, திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. 

8 பச்சிளம் குழந்தைகளை விஷ ஊசி செலுத்தி கொன்ற நர்ஸ் - காரணம் என்ன?

8 பச்சிளம் குழந்தைகளை விஷ ஊசி செலுத்தி கொன்ற நர்ஸ் - காரணம் என்ன?

760 ஆண்டு சிறை

இவர் நோயாளிகளுக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் இன்சுலின் மருந்தை கொடுத்து இருக்கிறார். பொதுவாக இன்சுலின் சர்க்கரை நோய் உடையவர்களுக்கு அளிக்கப்படும் மருந்தாகும். இவர் சர்க்கரை நோய் இல்லாதவர்களுக்கும் கொடுத்துள்ளார். மேலும், சிலருக்கு அதிக அளவிலான இன்சுலின் கொடுத்து இருக்கிறார்.

நோயாளிகளுக்கு தேவையற்ற மருந்து ; 17 பேர் பலி - செவிலியருக்கு 760 ஆண்டு சிறை தண்டனை! | Nurse Get Judgement For Killing Patients

இதனால், 19 நோயாளிகளில் 17பேர் நீரிழிவு நோய் இல்லாமலே இறந்திருக்கின்றனர். இவர் பல நோயாளிகளை கடுமையாக தாக்கியதாகவும், இரவில் நோயாளிகளுக்கு இன்சுலின் செலுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டார்.

முதலில் இதனை ஏற்க மறுத்த பிரஸ்டீ கடந்த மாத விசாரணையில், தந்து குற்றத்தை ஒப்புக்கொண்டார். ஆகையால் இவ்வழக்கை விசாரித்த நீதிமன்றம் ​​41 வயதான ஹீதர் பிரஸ்டீக்கு, மூன்று ஆயுள் தண்டனையும், 380 - 760 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது.