தேர்தலில் தோற்று செத்து சாம்பலே ஆனாலும்..அதுமட்டும் நடக்காது - சீமான் திட்டவட்டம்

Naam tamilar kachchi Tamil nadu Seeman
By Sumathi Aug 11, 2025 08:58 AM GMT
Report

நாதக தனித்தே போட்டியிடும் என சீமான் தெரிவித்துள்ளார்.

தனித்தே போட்டி 

சென்னை ஆயிரம் விளக்கில் நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்கள் சந்தித்தார். அப்போது பேசிய அவர்,

seeman - vijay

வாக்கை பற்றி கவலைப்படுகிற ஒருவன் மக்களின் வாழ்க்கையை பற்றி சிந்திக்க மாட்டான். ஓட்டை குறிவைத்து வேலை செய்பவன் நாட்டை பற்றி கவலைப்பட மாட்டான். சாதி, மதம், கடவுளை பற்றி சிந்திப்பவன் மக்களை பற்றி சிந்திக்க மாட்டான்.

மக்களை பற்றி சிந்திப்பவன்; மக்களை பற்றி கவலைப்படுபவன் சாதி, மதம், கடவுளை பற்றி சிந்திக்க அவனுக்கு நேரமும் இருக்காது; தேவையும் இருக்காது. நாம் தமிழர் கட்சியை ஏதேனும் ஒரு கூட்டணியில் சேர்க்க வாக்குகள் குறையும் என வதந்தி பரப்புகிறார்கள்.

தமிழக வாக்காளர்களாகும் வடமாநிலத்தவர்கள்; பேராபத்தை உண்டாக்கும் - சீமான் கொந்தளிப்பு!

தமிழக வாக்காளர்களாகும் வடமாநிலத்தவர்கள்; பேராபத்தை உண்டாக்கும் - சீமான் கொந்தளிப்பு!

சீமான் ஆவேசம்

விஜய் வருகையால் எங்களுக்கு வாக்குகள் குறையும் என தவறான தகவல்களை பரப்புகிறார்கள். நான் பயந்து, கூட்டணிக்குப் போய்விடுவேன் என்று எதிர்பார்க்கிறார்கள். 2026 சட்டசபை தேர்தலில் நாதக தனித்து போட்டியிடும்.

தேர்தலில் தோற்று செத்து சாம்பலே ஆனாலும்..அதுமட்டும் நடக்காது - சீமான் திட்டவட்டம் | Ntk Will Contest Alone Says Seeman

தேர்தலில் தோற்று செத்து சாம்பல் ஆனாலும் நாம் தமிழர் கட்சி தனித்தே போட்டியிடும். கூட்டணியில் இணைந்து நாதக தனது தனித்துவத்தை ஒருபோது இழக்காது. அரசியலில் விஜயகாந்த், வைகோ செய்த தவறை நான் ஒருபோது செய்யமாட்டேன்.

நாம் மக்களுக்கு ஆனவன்; எனது வெற்றியையும், தோல்வியையும் மக்கள் தான் தீர்மானிப்பார்கள். நாம் தமிழர் கட்சிக்கு கூட்டணியே தேவையில்லை என தெரிவித்துள்ளார்.