நடந்தது தேர்தலே இல்லையே...மக்கள் தான் தோத்துட்டாங்க!! வருத்தத்தில் நா.த.க அபிநயா
வெளிவந்துள்ள விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி டெபாசிட் இழந்துள்ளது.
அக்கட்சியின் வேட்பாளர் அபிநயா 10,479 வாக்குகளை வாங்கியுள்ளார். தேர்தல் தோல்விக்கு பிறகு அவர் செய்தியாளர்களை சந்தித்த போது பேசியது வருமாறு,
டென்ட் போட்டு மக்களை அடைத்து வைத்து மற்றவர்களை பிரச்சாரம் செய்யவிடாமல் தடுத்தது, கஞ்சா பட்டுவாடா செய்தது, லட்டுவில் மறைத்து மூக்குத்தி வைத்து கொடுத்தது ...என இதெல்லாம் நாங்க கேவலமா தான் பாக்குறோம்.
தேர்தல் ஆணையம் ஒரு தடவ கூட நடவடிக்கை எடுக்கல. ஆளும் கட்சிக்கு அவுங்க சாதகமாக நடந்தாங்க. ஜனநாயக தேர்தல் படி தேர்தலே நடக்கல.இது தேர்தலே இல்லையே. ஏலம் தான் எடுத்தாங்க. மக்களை ஏமாத்திட்டு, எங்களை மாறி பலரை ஏமாற்றிடு, எதற்கு இதெல்லாம்.
எங்க அண்ணனும் இத தான் சொல்லுவாங்க, இனிமே இடைத்தேர்தல் வைக்காதீங்க, ஏலம் வெச்சிட்டு போய்டுங்க.
இத நாங்க தோல்வியா பாக்கல. மக்களோடு தோல்வி தான். பணநாயகத்தின் வெற்றி, பணநாயகத்தின் தோல்வி.