இது 2026 தேர்தலின் முன்னோட்டமல்ல - விக்கிரவாண்டி இடைத்தேர்தல் முடிவுகள்!! அண்ணாமலை கருத்து

Tamil nadu BJP K. Annamalai Election Viluppuram
By Karthick Jul 13, 2024 07:46 AM GMT
Report

விக்கிரவாண்டி இடைத்தேர்தலின் முடிவுகள் வெளியாகி கொண்டு இருக்கின்றன.

இடைத்தேர்தல் முடிவுகள் 

மத்திய 1 மணி நிலவரப்படி, திமுகவின் வேட்பாளர் அன்னியூர் சிவா 94,322 வாக்குகளை பெற்று வெற்றி முகத்தில் உள்ளார். பாமகவின் சி. அன்புமணி 40,587 வாக்குகளும், நாம் தமிழர் கட்சியின் அபிநயா 7423 வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளார்.

இது 2026 தேர்தலின் முன்னோட்டமல்ல - விக்கிரவாண்டி இடைத்தேர்தல் முடிவுகள்!! அண்ணாமலை கருத்து | Annamalai About Vikravandi Byelection Results

53,735 வாக்குகள் வித்தியாசத்தில் அன்னியூர் சிவா முன்னிலை வகிக்கும் சூழலில் அவரின் வெற்றி கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. இன்னும் 6 சுற்று முடிவுகள் மட்டுமே வெளிவரவுள்ளது.

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை - 2ம் சுற்று முடிவில் யார் முன்னிலை ?

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை - 2ம் சுற்று முடிவில் யார் முன்னிலை ?

அண்ணாமலை பேட்டி 

வெளியாகி வரும் தேர்தல் முடிவுகள் குறித்து செய்தியாளர்களை சந்தித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை,  விக்கிரவாண்டி இடைத்தேர்தல் முடிவு 2026-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின் முன்னோட்டமில்லை. முடிவுகள் முழுமையாக வெளியான பிறகு, கருத்துகளை தெரிவிக்கிறேன் என்று தெரிவித்திருக்கிறார்.

இது 2026 தேர்தலின் முன்னோட்டமல்ல - விக்கிரவாண்டி இடைத்தேர்தல் முடிவுகள்!! அண்ணாமலை கருத்து | Annamalai About Vikravandi Byelection Results

எப்போதும் இடைத்தேர்தல்களில் ஆளும் கட்சிகளே வெற்றி பெரும் என்றும் அவர் கூறினார். விக்கிரவாண்டி இடைத்தேர்தலுடன் சேர்த்து மொத்தமாக 7 மாநில சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெற்றுள்ளது. 13 இடங்களில் 12'இல் இந்தியா கூட்டணி காட்சிகள் முன்னிலை வகிக்கின்றன குறிப்பிடத்தக்கது.