தேர்தலுக்குள் இதை செய்தால் எங்கள் வாக்கு பாஜகவுக்கு - சீமான் அதிரடி!
தேர்தல் ஆணையம் பாஜகவின் கட்சி அலுவலமாக மாறிவிட்டதாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம்சாட்டியுள்ளார்.
சீமான்
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தேனி மாவட்ட பகுதிகளில் நடந்த பிரசார கூட்டத்தில் தனது கட்சி வேட்பாளருக்கு ஆதரவு திரட்டினார். அப்போது பேசிய அவர் "பணம் இருப்பவர்கள்தான் அரசியல் செய்ய முடியும் என்ற நிலை உருவாகி உள்ளது.
அரசியல் என்பது மக்களுக்காக உழைக்க மட்டுமே. மக்களை வைத்து பிழைப்பதற்காக இல்லை. திமுக, அதிமுக, பாஜக பெரிய கட்சி என்கின்றனர். ஆனால் தனித்து நிற்க பயப்படுகின்றனர்.
பாஜகவுக்கு வாக்கு
கச்சத்தீவை மீட்காமல் 10 ஆண்டுகளாக கோமாவில் இருந்து விட்டு 10 நாட்களில் தேர்தல் வரவுள்ள நிலையில் இதுபற்றி பாஜக பேசி வருகிறது. நான் 13 ஆண்டுகளாக கச்சத்தீவை பற்றி பேசி வருகிறேன். 6 மாதங்களுக்கு முன்பு மத்திய அமைச்சர் அமித்ஷாவிற்கு இது குறித்து கடிதம் எழுதினேன்.
தேர்தலுக்குள் கச்சத்தீவை மீட்டுக் கொடுத்தால் நானும் எனது கட்சியினரும் பாஜகவுக்கு வாக்களிக்கிறோம். பாஜகவுடன் யார் கூட்டணி அமைத்தாலும் அது எங்களுக்கு எதிர்கட்சிதான். தேர்தல் ஆணையம் பாஜகவின் கட்சி அலுவலமாக மாறி விட்டது" என்று குற்றம்சாட்டியுள்ளார்.