பெரியாரை பத்தி இன்னும் பேசவே இல்லையே; தீக்குளிச்சு செத்துருவீங்க - மிரட்டிய சீமான்!
பெரியாரை பற்றி பேச தொடங்கினால் எல்லோரும் தீக்குளித்து செத்துவிடுவீர்கள் என சீமான் தெரிவித்துள்ளார்.
பெட்ரோல் குண்டு வீச்சு
சென்னை மாவட்ட தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் தலைவர் டிங்கர் குமரன் உள்ளிட்ட அந்த இயக்கத்தின் 10 நிர்வாகிகளை போலீஸார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து 3 பெட்ரோல் குண்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
பெரியாரை இழிவாக பேசி வரும் சீமான் வீடு மீது பெட்ரோல் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்த சதித் திட்டம் தீட்டியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
கொதித்த சீமான்
இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள சீமான், பெரியார் குறித்து நான் இன்னமும் பேசவே ஆரம்பிக்கவில்லையே.. அதற்குள் குண்டு போட வருவீங்களா? பெரியாரை யாரும் இழிவாக பேசவில்லை. பெரியார் பேசியதை எழுதியதைத்தான் பேசினேன்.
அப்ப நான் பெரியாரைப் பற்றி பேசத் தொடங்கினால் நீ என்ன செய்வ? நீ என்ன தீக்குளித்து செத்து போவியா? என்ன பண்ணுவீங்க? இதற்கு எல்லாம் பயப்படுகிற ஆள் நானில்லை.
ஏதோ வேற வேலை இருக்கிறது. அதனால் இடைவெளி விட்டிருக்கிறேன். மறுபடியும் ஆரம்பித்துவிடுவேன். பார்த்து அடக்கமா இருங்க. தோண்டி தோண்டி எடுத்து என் முன்னாடி நிறுத்தாதீங்க எனத் தெரிவித்துள்ளார்.