குடும்ப தலைவிக்கு ரூ.1000 தான்.. குடிச்சு செத்தா 10 லட்சமா? கொந்தளித்த சீமான்!

Naam tamilar kachchi Tamil nadu Seeman Kallakurichi
By Jiyath Jun 25, 2024 02:33 AM GMT
Report

கள்ளச்சாராயம் குடித்து இறப்பவர்களை அரசு ஊக்குவிக்கிறது என்று சீமான் குற்றம்சாட்டியுள்ளார். 

சீமான் 

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவத்தில் இதுவரை 55-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும், ஏராளமானோர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

குடும்ப தலைவிக்கு ரூ.1000 தான்.. குடிச்சு செத்தா 10 லட்சமா? கொந்தளித்த சீமான்! | Ntk Seemaan About Kallkurichi Issue

இதனிடையே கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களின் குடும்பத்திற்கு தமிழக அரசு ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளது. இந்நிலையில் இதுகுறித்து பேசிய நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் "கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களின் மீது எனக்கு அனுதாபம் கிடையாது. ஆத்திரம் தான் வருகிறது. இந்த நாட்டில் அதிகபட்ச நிவாரணம் எதுக்கு கொடுக்கிறார்கள்.

எதுவுமே தெரியாமல் இருக்க நான் என்ன ஸ்டாலினா - ஆர்ப்பாட்டத்தில் ஆவேசமான ஈபிஎஸ்!

எதுவுமே தெரியாமல் இருக்க நான் என்ன ஸ்டாலினா - ஆர்ப்பாட்டத்தில் ஆவேசமான ஈபிஎஸ்!

கேவலம்

சாராயம் குடிச்சி இறந்ததற்குத்தான். இது நாடா? சுடுகாடா? குடிக்க வைச்சி தாலியை அறுக்கறுது தான் அரசின் பொறுப்பா? கள்ளச்சாராயம் குடிச்சு இறப்பவர்களை அரசு ஊக்குவிக்கிறது.

குடும்ப தலைவிக்கு ரூ.1000 தான்.. குடிச்சு செத்தா 10 லட்சமா? கொந்தளித்த சீமான்! | Ntk Seemaan About Kallkurichi Issue

நீங்க 10 லட்சம் நிவாரணம் அறிவித்த உடனே கள்ளச்சாராயம் குடிச்சு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு குணமாகி வீட்டுக்கு போனவன் மறுபடியும் கள்ளச்சாராயம் குடிக்கிறான். அந்த 10 லட்சம் பணத்திற்காக... குடும்ப தலைவிக்கு 1000 ரூபாய் தான் குடிச்சு செத்தா 10 லட்சம் எப்படி இருக்கு... கேவலம்" என்று தெரிவித்துள்ளார்.