நாட்டிற்கு எதிரான செயல்களில்...நாம் தமிழர் கட்சியினரை NIA கைது செய்யும்.! எல்.முருகன்
விரைவில் நாம் தமிழர் கட்சியினரை NIA கைது செய்யும் என மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
சோதனை
சென்னை, கோவை, திருச்சி, தென்காசி, ராஜபாளையம் உள்பட பல்வேறு பகுதிகளில் உள்ள நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் வீட்டில் கடந்த 2ஆம் தேதி NIA அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
இதில் நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவரும், பிரபல யூடியூப்பரான சாட்டை துரைமுருகன் வீட்டிலும் சோதனை நடைபெற்றது. இந்நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த பாஜகவை சேர்ந்த மத்திய இணையமைச்சர் எல்.முருகன் இந்த விஷயத்தில் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.
அவர் பேசும் போது, தேசத்தின் ஒற்றுமைக்கு எதிராக நாம் தமிழர் கட்சியினர் செயல்பட்டுக் கொண்டு இருக்கிறார்கள் என்பதை NIA சோதனை காட்டுவதாக கூறி, நாம் தமிழர் கட்சியினரின் செயல்பாடுகளை கண்காணித்த பிறகே அவர்களின் வீடுகளில் NIA சோதனை செய்துள்ளனர் என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், NIA அதிகாரிகள் கைது நடவடிக்கையிலும் ஈடுபடப்போவதாக தெரிவித்து நாட்டுக்கு எதிராகவும், பிரிவினைவாதம் செய்பவர்களையும் NIA என்கிற தேசிய பாதுகாப்பு முகமை கண்காணிக்கும் என குறிப்பிட்டார்.