நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் வீட்டை சுற்றி வளைத்த என்ஐஏ - சாட்டை துரைமுருகன் வீட்டில் சோதனை!

Naam tamilar kachchi Tamil nadu
By Sumathi Feb 02, 2024 05:04 AM GMT
Report

சாட்டை துரைமுருகன் வீட்டில் என்ஐஏ அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

சாட்டை துரைமுருகன்

கோவை மாவட்டத்தில் இரண்டு இடங்களில் என்ஐஏ சோதனை நடைபெற்று வருகிறது. ஆலாந்துறை ஆர்.ஜி.நகரில் ரஞ்சித் என்பவரின் வீட்டில் இன்று காலை முதல் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

sattai duraimurugan

அதேபோல், காளப்பட்டி பகுதியில் முருகன் என்பவரின் வீட்டிலும் சோதனை நடைபெற்று வருகிறது. தடை செய்யப்பட்ட இயக்கங்களுடன் தொடர்பில் இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் சோதனை நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாம் தமிழர் கட்சி ஆதரவாளர் சாட்டை துரைமுருகன் மீண்டும் கைது!

நாம் தமிழர் கட்சி ஆதரவாளர் சாட்டை துரைமுருகன் மீண்டும் கைது!

என்ஐஏ சோதனை

திருச்சியில் ஒரு இடத்திலும், சிவகங்கையில் ஒரு இடத்திலும், தென்காசியில் ஒரு இடத்திலும், சென்னையில் ஒரு இடத்திலும் சோதனை என பரபரப்பு நிலவி வருகிறது. குறிப்பாக யூடியூபில் பிரபலமான நாம் தமிழர் கட்சி பிரமுகரான சாட்டை துரைமுருகனின் திருச்சி வயலூர் சாலை சண்முகா நகரில் உள்ள இல்லத்தில் காலை முதலே தீவிர சோதனை நடந்து வருகிறது.

nia raid

நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் மதிவாணன்(39) வீட்டிலும், அதே கட்சியைச் சேர்ந்த தென்னக விஷ்ணு என்ற யூடியூபர் வீட்டில் சோதனை நடத்தி வருகின்றனர்.