கருக்கலைப்பிற்கு 12 வருஷம் கழிச்சு பரிசோதனையா..?சாட்டை துரைமுருகன் கேள்வி..!
நடிகை விஜயலக்ஷ்மிக்கு உணவில் மாத்திரை கலந்து கொடுத்து நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் கருக்கலைப்பு செய்தார் என வீரலட்சுமி பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
விஜயலக்ஷ்மி சீமான் விவகாரம்
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னை திருமண செய்து கொள்வது கூறி ஏமாற்றிவிட்டதாக, நடிகை விஜயலக்ஷ்மி அவர் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார். அதனை தொடர்ந்த்து அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்ட நிலையில், சீமான் நேரில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டது.
அதனை தொடர்ந்து அவர் தரப்பில் அவரது வக்கீல் சென்னை வளசரவாக்க காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி சில விளக்கங்களை அளித்தார். இதற்கிடையில், நடிகை விஜயலக்ஷ்மி தற்கொலை செய்து கொள்வதாகவும், அதன் காரணமாக பாதுகாப்பு அளிக்க வேண்டும் என கூறி, தமிழர் முன்னேற்றப் படையின் தலைவர் வீரலட்சுமி சென்னை போலீசில் புகார் மனு கொடுத்துள்ளார்.
சாப்பாட்டில் 7 முறை கருக்கலைப்பு மாத்திரை
அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், சீமான் விஜயலட்சுமிக்கு சாப்பாட்டில் 7 முறை கருக்கலைப்பு மாத்திரையை கலந்து கொடுத்திருக்கிறார் என்றும் இந்த வழக்கில் உதவி கமிஷனர் ஒருவர் தலையிட்டால் வழக்கை திசை திருப்புகிறார் என்றும் குற்றம்சாட்டி அவரது தலையீட்டை தவிர்க்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
இதற்கிடையில், நடிகை விஜயலக்ஷ்மி மீது நாம் தமிழர் கட்சியினரும் தங்களது பங்கிற்கு அவதூறு வழக்கு அளித்து வருகிறார்கள் என்பது குற்றச்சாட்டு. அதே நேரத்தில் விஜயலக்ஷ்மியும் அவர்களின் குற்றச்சாட்டிற்கு தக்கபதிலடியை தொடர்ந்து அளித்து வருகிறார்.
சாட்டை துரைமுருகன் கேள்வி
இந்நிலையில் இது குறித்து நாம் தமிழர் கட்சியின் கொள்கை பரபரப்பு செயலாளர் சாட்டை துரைமுருகன் பல கேள்விகளை எழுப்பியுள்ளார். அதில், 12 வருடங்கள் கழித்து மருத்துவ பரிசோதனை செய்வது வேடிக்கையாக உள்ளது என்றும் இத்தனை வருடம் எத்தனை பேருடன் விஜயலட்சுமி பழகி இருப்பார் என்றும் சாட்டை துரைமுருகன் கடுமையாக விமர்சித்துள்ளார்.
மேலும், பெண்கள் மத்தியில் சீமானுக்கு உள்ள நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தவே இதுபோன்ற புகார் அளிக்கப்படுவதாகவும் தேர்தல் நெருங்கும் நேரத்தில் யார் சதித்திட்டம் தீட்டினாலும் எடுபடாது என்றும் சாட்டை துரைமுருகன் தெரிவித்தார்.