மணிப்பூர் கலவரத்தை 30 நிமிடத்தில் நிறுத்துவேன் - சீமான் ஆவேசம்!
மணிப்பூர் கலவரத்தை 30 நிமிடங்களில் நிறுத்தி விடுவேன் என சீமான் தெரிவித்துள்ளார்.
சீமான்
தேனி, போடிநாயக்கனூரில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கினைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், மெய்தி என்ற ஜாதி இந்துக்களை வைத்து
பூர்வகுடி மக்களான குக்கி சமூகத்தினரை விரட்ட மணிப்பூரில் முயற்சி நடந்து கொண்டிருக்கிறது. மணிப்பூரில் பழங்குடி கிறிஸ்தவ மக்களை காடுகளில் இருந்து வெளியேற்றி விட்டு அங்குள்ள கனிம வளங்களை சுரண்டுவதற்காக தான் கலவரம் நடக்கிறது.
மணிப்பூர் கலவரம்
ஒரே தேசம், ஒரே கொள்கை, என கூறுபவர்களால், காவிரியில் நீர் பிரச்னை, முல்லைப் பெரியாறு பிரச்னையை ஏன் தீர்க்க முடியவில்லை. தன்னிடம் நாட்டையும், அதிகாரத்தையும் கொடுத்தால்,
மணிப்பூரில் நடக்கும் கலவரத்தை வெறும் 30 நிமிடங்களில் நிறுத்தி விடுவேன் எனத் தெரிவித்துள்ளார்.