மிரட்டல் விடுத்த நாம் தமிழர் கட்சியினர்..கைதாகிறாரா சீமான்.? எச்சரிக்கை கொடுத்த எஸ்.பி வருண்குமார்
எனது வீட்டில் உள்ள பெண்களையும் ,எனது குடும்பத்தாரையும் அவதூறு பேசி, மிரட்டல் விடுத்த நபர்களை விடமாட்டேன் என்று திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வருண்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சீமான்
திமுக பற்றி தொடர்ந்து சீமான் விமர்சிப்பது பல வருடங்களாக நடந்து வந்தாலும் திமுக அதனை பெரிதும் கண்டுகொள்ளவில்லை.ஆனால் சமீப காலமாக கருணாநிதி குறித்த பிரச்சார பாடலை சீமான் தொடர்ந்து பாடி வருவது மோதலின் உச்சத்தை அடைந்துள்ளது.
மறுபுறம் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ,சாட்டை துரை முருகன் , இடும்பாவனம் கார்த்திக் உள்ளிட்டோர் திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வருண்குமாரை தகாத வார்த்தை மற்றும் மிரட்டும் தோணியில் பேசியதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில்,திருச்சி தில்லைநகர் காவல் நிலையத்தில் திருச்சி எஸ்.பி வருண்குமார் புகார் அளித்துள்ளார்.அவர் அளித்த புகாரின் அடிப்படையில் 8 பிரிவுகளின் கீழ் சீமான் , இடும்பாவனம் கார்த்திக் , சாட்டை துரைமுருகன் உள்ளிட்ட 22 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
திருச்சி எஸ்.பி
தொடர்ந்து நாம் தமிழர் கட்சியினர் சமூகவலைத்தளங்களில் திருச்சி எஸ்.பி வருண்குமார் மற்றும் அவரது குடும்பத்தினரை பற்றி ஆபாசமான வார்த்தைகளில் கருத்துக்களை பதிவிட்டு வரும் நிலையில் திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வருண்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து தனது எக்ஸ் பதிவில் குறிப்பிட்டுள்ள எஸ்பி வருண்குமார், அரசியலுக்கும் இந்த விஷயத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. எனது வீட்டில் உள்ள பெண்களையும், எனது குழந்தைகளையும், எனது குடும்பத்தாரையும் அவதூறு பேசி, மிரட்டல் விடுத்த நபர்களை விடமாட்டேன். சட்டத்தின் முன்னால் கண்டிப்பாக கொண்டு வந்து நிறுத்துவேன். என் சட்டப் போராட்டம் தொடரும் என்று தெரிவித்துள்ளார்.