காங்கிரஸ் கட்சிக்கு ரூ.1,700 கோடி அபராதம் - வருமான வரித்துறை அதிரடி நோட்டீஸ்!
காங்கிரஸ் கட்சிக்கு வருமான வரித்துறை ரூ.1700 கோடி அபராதம் விதித்து நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அபராதம்
மக்களவை தேர்தல் நெருங்கி உள்ள நிலையில், காங்கிரஸ் கட்சியை மத்திய வருமானவரித்துறை உன்னிப்பாக கவனித்து வருகிறது.
கடந்த 10 ஆண்டுகளாக பெரிய நிறுவனத்தில் இருந்து காங்கிரஸ் கட்சிக்கு நிதி அளிக்கப்படாதவாறு வருமான வரித்துறை தடுத்து நிறுத்தியுள்ளனர் என தொடர் குற்றசாட்டு வைத்து வருகின்றனர்.
இந்நிலையில், சில நாட்களுக்கு முன் காங்கிரஸின் வங்கிக் கணக்குகளை முடக்கி அதிலிருந்து ரூ.135 கோடியை வருமான வரித்துறை பறிமுதல் செய்திருந்தது. இதை தொடர்ந்து அடுத்தகட்டமாக காங்கிரஸ் கட்சிக்கு மற்றொரு அதிர்ச்சியையும் வருமானவரித்துறை அளித்துள்ளது.
அதிரடி நோட்டீஸ்
நான்கு ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சி வருமான வரி தாக்கல் செய்யப்படவில்லை என கூறி அதற்காக 1700 கோடி ரூபாயை வட்டியுடன் அபராதமாக செலுத்த வேண்டும் என்று தற்போது நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
கடந்த 2017 - 18 ம் நிதி ஆண்டிலிருந்து 2021 - 22 நிதியாண்டு வரை நான்காண்டு காலமாக கட்சி சார்பில் முறையான வருமான வரி செலுத்தப்படவில்லை. அதனால் வட்டியுடன் அபராதமாக ரூபாய் 1700 கோடியை காங்கிரஸ் கட்சி செலுத்த வேண்டும் என்று அந்த நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதை எதிர்த்து காங்கிரஸ் கட்சி சார்பில் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டுள்ளது. வருமான வரித்துறையின் இந்த தொடர் நடவடிக்கைகளால் காங்கிரஸ் கட்சி பொருளாதார ரீதியாக முடங்கியிருப்பது தெரியவந்துள்ளது.