மக்களவை தேர்தல் - தமிழக காங்கிரஸின் 2 தொகுதி வேட்பாளர் தேர்வில் இழுபறி - என்ன காரணம்?

Indian National Congress Tamil nadu Election Lok Sabha Election 2024
By Jiyath Mar 25, 2024 07:13 AM GMT
Report

தமிழக காங்கிரஸின் 2 தொகுதி வேட்பாளர் தேர்வில் இழுபறி நீடித்து வருகிறது. 

மக்களவை தேர்தல்

2024 மக்களவை தேர்தல் நாடு முழுவதும் ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கி 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. தமிழகம் மற்றும் புதுவையில் ஏப்ரல் 19-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4-ம் தேதி நடைபெறவுள்ளது.

மக்களவை தேர்தல் - தமிழக காங்கிரஸின் 2 தொகுதி வேட்பாளர் தேர்வில் இழுபறி - என்ன காரணம்? | Drag In Tamilnadu Congress Candidate Selection

இதனை முன்னிட்டு தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளது. மேலும், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தமிழக தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது. தமிழகத்தில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு புதுச்சேரியுடன் 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன.

இதனையடுத்து திருவள்ளூர், விருதுநகர், கன்னியாகுமரி, கரூர், சிவகங்கை, கடலூர், கிருஷ்ணகிரி ஆகிய தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டனர். மேலும், புதுச்சேரியில் வைத்திலிங்கம் மீண்டும் போட்டியிடுவார் என தெரிவிக்கப்பட்டது . ஆனால் நெல்லை மற்றும் மயிலாடுதுறைக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்படவில்லை.

பாஜகவின் வேட்பாளர் பட்டியல்: களமிறங்கும் நடிகை கங்கனா - வயநாடு தொகுதியில் இவரா..?

பாஜகவின் வேட்பாளர் பட்டியல்: களமிறங்கும் நடிகை கங்கனா - வயநாடு தொகுதியில் இவரா..?

நீடிக்கும் இழுபறி 

மூத்த நிர்வாகிகள் பலரும் தங்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என அழுத்தம் கொடுப்பதால் இழுபறி நீடிப்பதாக கூறப்படுகிறது. மயிலாடுதுறை தொகுதியில் ராகுல் காந்திக்கு நெருக்கமான பிரவீன் சக்கரவர்த்தி போட்டியிட முயற்சி செய்வது வருகிறார்.

மக்களவை தேர்தல் - தமிழக காங்கிரஸின் 2 தொகுதி வேட்பாளர் தேர்வில் இழுபறி - என்ன காரணம்? | Drag In Tamilnadu Congress Candidate Selection

ஆனால், ஏற்கனவே முன்பு மணிசங்கர் ஐயர் எம்.பி.யாக இருந்ததை சுட்டிக்காட்டும் காங்கிரஸ் நிர்வாகிகள், அவருக்கே வாய்ப்பு வழங்க அழுத்தம் கொடுக்கின்றனர். அதேபோல் நெல்லையில் புதியவர்களுக்கே வாய்ப்பு இருக்கும் என்றும், ராபர்ட் புரூஸ் மற்றும் பால்ராஜ் ஆகியோர் தேர்வு பட்டியலில் முன்னணியில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஆனால் பால்ராஜூக்கு வாய்ப்பளிக்க கூடாது என காங்கிரஸ் நிர்வாகிகளே கூறி வருகின்றனர் என்று தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் மீதமுள்ள இரண்டு மக்களவை தொகுதிகளுக்கான வேட்பாளர்களின் பெயர்கள் விரைவில் அறிவிக்கப்படும் என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை தெரிவித்துள்ளார்.