ஜெய் ஸ்ரீ ராம்...அல்லாவு அக்பர் - இரண்டிற்கும் பெரிய வித்தியாசமில்லை - முகமது ஷமி.!!
ஜெய் ஸ்ரீ ராம் என 1000 முறை கூட சொல்லலாமே என இந்திய அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் முகமது ஷமி தெரிவித்துள்ளார்.
கோஷம்
கடந்த சில காலமாகவே கிரிக்கெட் மைதானத்தில் இந்திய அணியின் ரசிகர்கள் பிற அணி வீரர்களை பார்த்து ஜெய் ஸ்ரீ ராம் என கோஷமிட்டு வருகின்றார்.
இது கடந்த உலகக்கோப்பையின் போது பெரும் சர்ச்சையாக வெடித்தது. இடதுசாரிகள் பலரும் கண்டனங்கள் தெரிவித்து வரும் நிலையில், வழுதுசாரிகள் இதில் என்ன தவறிருக்கிறது என்றும் தொடர்ந்து அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.
இது குறித்து முகமது ஷமி தெரிவித்துள்ள கருத்துக்கள் தற்போது வைரலாகி வருகின்றது.
சொல்வதில் என்ன பிரச்சனை
எல்லா மதங்களிலும் மாற்று மதத்தினரை விரும்பாத சில பேர் இருப்பார்கள். அதில் எனக்கு எந்த ஆட்சேபனையும் கிடையாது. ராமர் கோயில் கட்டப்படுகிறது என்றால் ஜெய் ஸ்ரீ ராம் என்று சொல்வதில் என்ன பிரச்சனை இருக்கிறது. ஒருமுறை அல்ல, 1000 முறை கூட ஜெய் ஸ்ரீ ராம் என்று சொல்லலாம் என்று தெரிவித்துள்ளார்.
அதேபோல் எனக்கு அல்லாகூ அக்பர் என்று சொல்ல வேண்டுமென்று தோன்றினால், நானும் ஆயிரம் முறை அல்லாகூ அக்பர் என்று கூறுவேன். இதனால் என்ன வேறுபாடு வந்துவிடப் போகிறது என்று தெரிவித்துள்ளார்.