World Cup: தோல்விக்கு இதுதான் காரணம்! அவர் அப்படி செய்தது.. - போட்டுடைத்த முகமது ஷமி!
உலகக்கோப்பை தோல்வி குறித்து இந்திய அணியின் பந்து வீச்சாளர் முகமது ஷமி பேசியுள்ளார்.
உலகக்கோப்பை தோல்வி
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் 2023 இந்தியாவில் நடைபெற்றது. இந்த தொடரின் இறுதிப்போட்டியில், இந்திய அணியை வீழ்த்தி 6வது முறையாக உலகக்கோப்பையை வென்றது ஆஸ்திரேலியா. இந்த தோல்வியால் இந்திய அணி வீரர்களும், ரசிகர்களும் மிகுந்த வேதனை அடைந்துள்ளனர்.
இந்த உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியின் பல வெற்றிகளுக்கு 'முகமது ஷமியின்' அபாரமான பவுலிங் ஒரு முக்கியமான காரணம். மொத்தம் 24 விக்கெட்டுகள் கைப்பற்றி இந்த தொடரில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய பந்து வீச்சாளர் என்ற பெருமையை ஷமி பெற்றார்.
என்ன காரணம்?
இந்நிலையில் தொடர் முடிவடைந்து தனது சொந்த ஊரான உத்தர பிரதேச மாநிலம், அம்ரோகா சென்றடைந்த அவரிடம் "இறுதிப் போட்டியில் இந்தியா தோல்வியடைய காரணம் என்ன? என கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த முகமது ஷமி "நாங்கள் போதுமான ரன்கள் எடுக்காததுதான் காரணம். நாங்கள் 300 ரன்கள் எடுத்திருந்திருந்தால், அந்த ரன்னுக்குள் ஆஸ்திரேலியாவை எளிதாக கட்டுப்படுத்தியிருப்போம். இறுதிப் போட்டிக்கு பிறகு பிரதமர் மோடி எங்களிடம் பேசி, நம்பிக்கை கொடுத்தது எங்கள் மன உறுதியை மீட்டெடுத்தது" என்று தெரிவித்துள்ளார்.