டிரெண்டிங்: GOAT ட்ரைலரில் இதையெல்லாம் கவனித்தீர்களா?

Vijay Viral Video GOAT
By Sumathi Aug 17, 2024 02:30 PM GMT
Report

 GOAT திரைப்படத்தின் ட்ரைலர் வெளியாகி வைரலாகி வருகிறது.

 GOAT

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் GOAT. இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். பிரஷாந்த், பிரபுதேவா, மோகன், சினேகா என பலர் நடித்துள்ளனர்.

GOAT

செப்டம்பர் ஐந்தாம் தேதி விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இப்படம் ரிலீஸாகவுள்ளது. முன்னதாக தற்போது இப்படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது. ஏற்கனவே இப்படத்திலிருந்து மூன்று பாடல்கள் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்றது. ட்ரைலரை பார்த்த பலரும் GOAT பிளாக்பஸ்டர் வெற்றியை பெரும் என்று கூறி வருகின்றனர்.

மீனாவின் அம்மாவே அப்படி நடித்தவர்தான் - குண்டை தூக்கிப்போட்ட பிரபலம்!

மீனாவின் அம்மாவே அப்படி நடித்தவர்தான் - குண்டை தூக்கிப்போட்ட பிரபலம்!

 ட்ரைலர் வைரல்

அழகிய தமிழ் மகன் திரைப்படத்தில் குருக்கள் வரார் வழி விடுங்கோ... என்கிற டயலாக்கை கொஞ்சம் மாற்றி அண்ணன் வரார் வழி விடுங்கோ என வைத்துள்ளார். ஸ்பை என கூறுவதால் விஜய் ஒரு சீக்ரெட் ஏஜென்ட் ரோலில் நடித்துள்ளது தெரிகிறது. தளபதியின் டீன் ஏஜ் தோற்றம் ரசிகர்களை கவர்ந்த அளவுக்கு, இளம் வயது தோற்றம் கவரவில்லை.

vijay

நடிகர் மோகனின் ஆக்ரோஷமான முகத்தையும் ட்ரைலரிலேயே ரிவீல் செய்துள்ளார். மோகன் பல வருடங்களுக்கு பின்னர், அப்பா - மகன் என இருவரையும் தேடி வருவதே கதைக்களமாக இருக்கும் எனத் தெரியவருகிறது. நடிகை சினேகாவின் முகம் கூடுதல் முதிர்ச்சியுடன் இருப்பதாக ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.

அனைத்தையும் தாண்டி கில்லி பட பாணியில் விஜய் காதில் பூவுடன், மருதமலை மாமணியே பாடலை பாடி கொண்டு பக்திமான் கெட்டப்பில் தோன்றுவது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.