டிரம்ப் மட்டுமில்லை...என்னையும் கொலை செய்ய முயற்சி நடந்தது - எலான் மஸ்க் பரபரப்பு!
முன்னாள் அதிபர் டிரம்ப்பை கொலை செய்ய முயற்சி நடந்தது.
டிரம்ப் மட்டுமில்லை..
அமெரிக்க முன்னாள் அதிபரும், குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளருமான டொனால்ட் டிரம்ப், பென்சில்வேனியாவின் பட்லரில் நடந்த தேர்தல் பேரணியின் போது, துப்பாக்கிச் சூடு நடத்தியதில் காயமடைந்தார்.
சம்பவத்திற்குப் பிறகு அவரது பாதுகாப்பு அதிகாரிகளால் அவர் முகத்தில் இரத்தத்துடன் மேடைக்கு வெளியே அழைத்துச் செல்லப்பட்டார். இந்நிலையில், எக்ஸ் சமூக வலைதளத்தில் பயனாளர் ஒருவர் எலான் மஸ்க்கிற்கு விடுத்த கோரிக்கையில்,
எலான் மஸ்க்
‛‛ தயவு செய்து உங்களது பாதுகாப்பை 3 மடங்கு அதிகரியுங்கள். டிரம்ப்பை நெருங்கி வந்தால், உங்களையும் கொலை செய்ய முயற்சிப்பர் ” எனக்கூறியிருந்தார்.இதற்கு எலான் மஸ்க் அளித்த பதிலில்; ஆபத்தான நேரத்தைக் கடந்துள்ளேன்.
கடந்த 8 மாதங்களில் இரண்டு பேர் என்னை வெவ்வேறு தருணங்களில் கொலை செய்ய முயற்சித்தனர். டெஸ்லா அலுவலகம் அருகே துப்பாக்கியுடன் அவர்கள் கைது செய்யப்பட்டனர். இவ்வாறு அந்தப் பதிவில் கூறியுள்ளார்.