'லியோ' டிரைலர் பார்த்தேன்; படத்தை பார்க்க நேரம் கிடைக்கலப்பா - வானதி சீனிவாசன் கவலை!
கோவை தெற்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் வானதி சீனிவாசன் செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்துள்ளார்.
வானதி சீனிவாசன்
பாஜக சார்பில், கோவை கோட்டை ஈஸ்வரன் கோயிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் கோவை தெற்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் வானதி சீனிவாசன் கலந்துகொண்டார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர் "கவுதமி கட்சி இருந்து விலகியது தனக்கும் கஷ்டத்தை கொடுத்திருக்கிறது என்றும், நிச்சயம் அவரை தொடர்பு கொண்டு பேசி, உதவிகளை செய்வேன்.
கோவை மாநகரம் பாதுகாப்பற்ற சூழ்நிலையில் இருப்பதை மாநில அரசு புரிந்து கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். பாஜக தொண்டர்கள், சமூக வலைதளங்களில் சிறு பதிவை செய்தால் கூட மாநில அரசு வழக்கு பதிவு செய்து விடுகிறது.
நேரம் கிடைக்கவில்லை
ஆனால் சமூக வலைதளங்களில் திமுக நிர்வாகிகள் பிரதமரை கீழ்த்தரமாக விமர்சித்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை. நான் 'லியோ' படத்தின் டிரைலரை அன்று வீட்டில் இருந்தபோது பார்த்தேன்.
ஆனால் படத்தை பார்ப்பதற்கு நேரம் கிடைக்கவில்லை. விடுமுறையில் வாய்ப்பு கிடைத்தால் படத்தை பார்ப்பேன் என்று தெரிவித்தார். சினிமாவையும் அரசியலையும் தமிழ்நாட்டில் பிரித்துப் பார்க்க முடியாது. நல்ல ஒரு பொழுதுபோக்கு படமாக இருந்தால், அதனை சென்று பார்ப்பதில் தவறில்லை என்று பேசியுள்ளார்.