மருமகள் பழகுவதை தடுப்பது குற்றமல்ல; தற்கொலை வழக்கு - நீதிமன்றம் கருத்து
மருமகளை டிவி பார்க்க அனுமதிக்காதது கொடுமை அல்ல என்று நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
மருமகள் தற்கொலை
மகாராஷ்டிரா, வாரங்கானையைச் சேர்ந்த ஒரு தம்பதிக்கு 2002 டிசம்பரில் திருமணம் நடந்துள்ளது. தொடர்ந்து பெற்றோர் வீட்டுக்கு திரும்பிய மகள், 2 மாதங்கள் கழித்து தற்கொலை செய்து கொண்டார்.

இதனையடுத்து மகள் தயாரித்த உணவைக் கேலி செய்தது, டிவி பார்க்க அனுமதிக்காதது, அக்கம்பக்கத்தினரை சந்திக்க விடாதது, கோயிலுக்கு தனியாக செல்ல விடாதது,
நீதிமன்றம் கருத்து
நள்ளிரவில் தண்ணீர் எடுக்க நிர்ப்பந்திக்கப்பட்டது என கணவர் வீட்டார் கடுமை காட்டி தற்கொலைக்கு தூண்டிவிட்டதாக பெண்ணின் பெற்றோர் புகாரளித்துள்ளனர். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், கணவர் மற்றும் அவரது பெற்றோரை குற்றவாளிகள் என தீர்ப்பளித்தது.

ஆனால், கணவர் தரப்பில் மும்பை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதனை விசாரித்த நீதிபதி அபய் வாக்வாஸ், மகளின் பெற்றோர் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகளில் என்ன வகையான கேலி செய்யப்பட்டது என்பது தெளிவாகத் தெரியவில்லை.
அண்டை வீட்டாருடன் பழகுவதை தடுப்பதையும் துன்புறுத்தலாகக் கூற முடியாது. தாய் வீட்டுக்கு திரும்பிய 2 மாதங்களுக்கு பின்னரே மகள் தற்கொலை செய்து கொண்டுள்ளார் எனக் கூறி மேல்முறையீடு செய்தவர்களின் தண்டனையை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
இலங்கை வந்த வத்திக்கான் வெளியுறவு அமைச்சருக்கு திடீர் உடல்நலக்குறைவு : குழம்பியது பயணத்திட்டம் IBC Tamil