2024 முடிய இன்னும் 2 மாதம்தான்.. பேரழிவு ஏற்படும் - நாஸ்டர்டாமஸ் பகீர் எச்சரிக்கை!
2024 குறித்து நாஸ்டர்டாமஸ் வெளியிட்ட கணிப்புகள் கவனம் பெற்றுள்ளது.
நாஸ்டர்டாமஸ்
தீர்க்கதரிசிகளில் மிக முக்கியமான நபராக கருதப்படுபவர் நாஸ்டர்டாமஸ். இவர் எதிர்காலத்தில் உலகம் முழுக்க என்ன நடக்கும் என்பதை தனது புத்தகமான Les Propheties என்பதில் கவிதைகளாக எழுதி வைத்துவிட்டு சென்றார்.
அதன்படி, பயங்கர போர்கள் வெடிக்கும். மாபெரும் பேரழிவு ஏற்படும். ரஷ்யா மற்றும் உக்ரைன் போர் முடிவுக்கு வரும். ரேசில் நாட்டில் எரிமலை வெடிப்பு மற்றும் மோசமான பெருவெள்ள பாதிப்பு ஏற்படும். விரைவில் ஒரு பேரழிவுகரமான போர் நடக்கும்.
பகீர் கணிப்பு
அது முடிந்த பின் ஒரு புதிய ராஜா பதவி ஏற்பார். அவர் நீண்ட காலம் பூமியை பாதுகாப்பார். சார்லஸ் III பதவியில் இருந்து விலகுவதற்கான வாய்ப்பு உள்ளது. உலகில் இன்னும் பல நாடுகளில் வெள்ளம், காட்டுத்தீ ஏற்படும். அது பஞ்சத்திற்கு வழி வகுக்கும். ஏஐ சாதனங்கள் மனிதர்களை கட்டுபடுத்த தொடங்கும்.
மனிதர்கள் கணினிகள் மூலம் கட்டுப்படுத்தப்படுவார்கள். ஏஐ சாதனங்கள் மனிதர்களை ஆளும். மிகவும் வயதான போப்பாண்டவரின் மரணத்தின் மூலம், நல்ல வயதுடைய ஒரு ரோமன் அந்த பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவார் எனக் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால் இவர் குறிப்பிட்ட கணிப்புகள் இந்த வருடம் இதுவரை நடக்கவில்லை. இந்த வருடம் முடிய இன்னும் 2 மாதங்கள் மட்டுமே உள்ளன. 9/11 தாக்குதல், அமெரிக்க அதிபர் ஜான் எப் கென்னடி கொலை, ஹிட்லரின் எழுச்சி, மரணம், லண்டன் தீ விபத்து என்று பல சம்பவங்களை இவர் கணித்துள்ளது குறிப்பிடத்தக்கது.