மரபணு மாற்றப்பட்ட மனிதர்கள் உருவாக்கபடுவார்கள்..நோஸ்ட்ராடாமஸின் மிரளவைக்கும் கணிப்புகள்!
2025ல் மனிதனில் ஏற்படும் மாற்றத்தைக் குறித்து தீர்க்கதரிசி நாஸ்ட்ராடாமஸ் கணித்துள்ளது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
நாஸ்ட்ராடாமஸ்
பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த மைக்கேல் டி நோஸ்ட்ராடேம் நாஸ்ட்ராடாமஸ் என்பவர் எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பதைக் கணிப்பவராகக் கருதப்படுகிறார். அந்த வகையில் இவரது கணிப்புகள் உலக ஊடகங்களில் அவ்வப்போது வெளி வருவது வழக்கம்.
கடந்த ஆண்டு இரண்டு உலகப் போர்கள் துவங்கியது முதல் பல கணிப்புகளை இவர் கூறியதாகப் பலரும் கருதுகின்றனர். அந்த வகையில் 2025ல் மனிதனில் ஏற்படும் மாற்றத்தைக் குறித்து தீர்க்கதரிசி நாஸ்ட்ராடாமஸ் கணித்துள்ளார்.
கணிப்பு
அதில், சாதாரண மக்களை மிஞ்சும் ஒரு மரபணு மாற்றப்பட்ட மனிதர்களை உருவாக்குவார்கள். 2025ஆம் ஆண்டளவில், செயற்கை நுண்ணறிவு (AI) திரும்பப் பெற முடியாத நிலையை அடையும்.
செவ்வாய்க் கிரகத்தில் நுண்ணுயிர் வாழ்வதற்கான சான்றுகள் கிடைக்கும் என்று நாஸ்ட்ராடாமஸ் கணித்துள்ளார். முன்னதாக 2024 ஆம் ஆண்டிற்கான சில முக்கியத்துவம் வாய்ந்த கணிப்புகளை நாஸ்ட்ராடாமஸ் செய்துள்ளார். அவற்றில் பெரும்பாலானவை உண்மையாகி வந்தது குறிப்பிடத்தக்கது.