பென்குயினுக்கு ராணுவ தளபதி பட்டம்.. விழா நடத்தி கௌரவித்த நாடு? - ஆச்சரியம்!
ஒரு நாட்டில் பென்குயினுக்கு ராணுவ தளபதி பட்டம் கொடுத்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
பென்குயின்
ஸ்காட்லாந்து நாட்டில் உள்ள எடின்பர்க் விலங்கியல் பூங்காவில் பென்குயின் பறவைக்கு ராணுவ தளபதி பட்டம் கொடுத்துள்ளனர். அண்மையில் பென்குயினை கௌரவப்படுத்தும் விழா சிறப்பாக நடைபெற்றது.
சார் நில்ஸ் ஓலவ் 3 என்ற ராஜா வகை பென்குயின், தற்போது அந்நாட்டின் ராணுவ மேஜர் ஜெனரலாக நியமனம் செய்யப்பட்டுள்ளது.
இந்த பறவை இதற்கு முன் ராணுவத்தில் பல பொறுப்புகளை வெவ்வேறு காலகட்டங்களில் செய்து வந்துள்ளது.
கின்னஸ் உலக சாதனை
இந்நிலையில், அந்த பென்குயின் பல பொறுப்புகளை செய்துள்ளதால், பதவி உயர்வு அளிக்கும் வகையிலும் தற்போது தளபதி பட்டம் சூட்டப்பட்டது. இதனை கௌரவிக்கும் விதமாக கின்னஸ் உலக சாதனைப் பதிப்பாசிரியர் கிரெய்க் க்ளெண்டே செப்டம்பர் 29 அன்று எடின்பர்க் உயிரியல் பூங்காவிற்குச் சென்று,
உயிரியல் பூங்காவின் பென்குயின் பராமரிப்பு குழுவிற்கு உலக சாதனைப் பட்டத்தை வழங்கியுள்ளார். இது குறித்த புகைப்படங்கள் தற்பொழுதுக்கு இணையத்தில் வைரலாகி வருகிறது.