தொடங்கும் வடகிழக்கு பருவம்; வெளுத்து வாங்கப்போகும் கனமழை - கவனம்!
தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை நாளை தொடங்குகிறது.
வடகிழக்குப் பருவமழை
தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக தென்மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவியது.
தென்மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்தில் புயலாக வலுப்பெறக்கூடும். இது மேலும் வலுவடைந்து 22-10-2023 மாலை தீவிர புயலாக நிலவக்கூடும்.
6 நாட்களுக்கு மழை
இந்நிலையில் தமிழ்நாட்டில் நாளை தொடங்குகிறது வடகிழக்குப் பருவமழை. இதன் காரணமாக அடுத்த 6 நாட்களுக்கு பரவலாக மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை மையம் கூறியுள்ளது.
தென் மேற்கு பருவமழை முற்றிலுமாக முடிவடைந்துள்ளதால் கடந்த ஆண்டை விட 8 சதவீதம் அதிகமாக தமிழகம் மழையை பெற்றுள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.