நாளை தொடங்கும் வடகிழக்கு பருவ மழை : எப்போது மழை அதிகரிக்கும் ?
வடகிழக்கு பருவமழை நாளை துவங்கும் நிலையில், 4ம் தேதி வரை பல மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ள பேட்டியில் :
மெதுவாக வரும் பருவ மழை
கடந்த நான்கு மாதங்களாக பெய்து வந்த தென் மேற்கு பருவமழை, இம்மாதம் 23ம் தேதியுடன் முழுமையாக விலகியுள்ள நிலையில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை இயல்பை விட 45 சதவீதம் அதிகமாக பெய்தது என்றும்
வடகிழக்கு பருவமழை நாளை முதல் தொடங்கி இயல்பைவிட அதிகமாக பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் வானிலை ஆய்வு மைய தலைவர் பாலசந்திரன் அவர்கள் தெரிவித்துள்ளார்
நவம்பருக்கு பிறகு அதிகரிக்கும்
மேலும் சிட்ரங் புயல் உருவானது தான் வடகிழக்கு பருவமழை தாமதமாக தொடங்கி உள்ளது என்றும் வழக்கமாக அக்டோபர் இரண்டாவது வாரத்திலேயே வடகிழக்கு பருவமழை தொடக்குவது வழக்கம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
நாளை முதல் பருவ மழை தொடங்கும் என்றும் படிப்படியாக நவம்பர் 4-ஆம் தேதிக்குப் பிறகு பருவமழை அதிகரிக்கும் என்றும் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்