விவாகரத்து செய்யும் தம்பதிகளே.. வடகொரியா அதிபர் போட்ட புதிய சட்டம் - அலறும் மக்கள்!
வடகொரியாவில் விவாகரத்து செய்யும் தம்பதிகளுக்கு அந்நாட்டு அரசு புதிய தண்டனையை வழங்கியுள்ளது.
வடகொரியா
உலகிலேயே மர்மமான நாடாக வடகொரியா இருந்து வருகிறது. அந்நாட்டின் அதிபராக கிம் ஜாங் உன் உள்ளார். அங்குச் சர்வாதிகார ஆட்சியை நடத்தி வரும் இவர் நாட்டு மக்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளார் .அதன்படி, மேற்கத்திய நாட்டுப் படங்களைப் பார்க்கத் தடை, சிகை அலங்காரத்திற்குத் தடை,
லிப்ஸ்டிக் போடத் தடை,ப்ளூ மற்றும் தோல் நிறத்திலான ஜீன்ஸ் போடத் தடை என பல்வேறு வினோத கட்டுப்பாடுகளை வித்துள்ளது.சமீபத்தில் அமெரிக்கா போன்ற நாடுகளில் சாப்பிடப்படும் ஹாட் டாக் உணவிற்கு வட கொரியா தடை விதித்தது. இதனால் வடகொரியா மக்கள் பல்வேறு சிரமங்களைச் சந்தித்துவருகின்றனர்.
இந்த தண்டனைகளை மீறும் பட்சத்தில் மறக்க முடியாத அளவுக்குப் பல கொடூர தண்டனைகளும் விதிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்திருந்தது.இந்த நிலையில் வடகொரியாவில் விவாகரத்து செய்யும் தம்பதிகளுக்கு அந்நாட்டு அரசு புதிய தண்டனை வித்துள்ளது.
புதிய தண்டனை
அதன்படி, விவாகரத்து செய்யும் தம்பதிகளை ஆறு மாதங்கள் வரை தொழிலாளர் முகாம்களுக்கு அனுப்புமாறு கிம் ஜாங்-உன் உத்தரவிட்டுள்ளதாகக் கூறப்பட்டு உள்ளது.அதிலும் குறிப்பாக விவாகரத்து கோரி விண்ணப்பிக்கும் பெண்கள் நீண்ட தண்டனையை எதிர்கொள்ள நேரிடும் என்றும் கூறப்படுகிறது.
முன்னதாக திருமண உறவை முடித்துக் கொள்வது என்பது குடும்ப வன்முறைக்கு எதிரானது. மேலும் அதிகரித்து வரும் விவாகரத்திற்குக் கடுமையான சட்டங்களைக் கொண்டுவந்தால் மட்டுமே இதைக் குறைக்க முடியும் என வடகொரியா அரசு தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.