இனி இந்த உணவை சாப்பிடுவது தேச துரோகம் - வடகொரியாவின் புதிய கட்டுப்பாடு
குறிப்பிட்ட உணவிற்கு தடை விதிப்பதாக வடகொரியா அறிவித்துள்ளது.
வடகொரியா
வடகொரியா பொதுவாகவே உடுத்தும் உடை தொடங்கி இசை கேட்பது வரை பல்வேறு கடுமையான கட்டுப்பாடுகள் உடைய நாடாக உள்ளது.
காரணம் அமெரிக்க போன்ற மேற்கத்திய நாடுகளின் கலாச்சாரங்களை வட கொரியா மக்கள் பின்பற்றமால் இருக்க இது போன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதாக கூறப்படுகிறது.
உணவு தடை
ரொட்டி துண்டுக்கு நடுவில் வறுத்த அல்லது வேகவைத்த இறைச்சியை வைத்து உருவாக்கப்படுவதுதான் ஹாட் டாக்(Hot Dog). இந்நிலையில் அமெரிக்கா போன்ற நாடுகளில் சாப்பிடப்படும் ஹாட் டாக் உணவிற்கு வட கொரியாவில் தடை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இனி வட கொரியாவில் ஹாட் டாக் தயாரித்தாலோ, விற்பனை செய்தாலோ அவர்களுக்கு கடுமையான தண்டனை விதிக்கப்படும் என உத்தரவிடப்பட்டதாக கூறப்படுகிறது.
உணவு விஷயத்தில் மட்டுமல்லாது ஜீன்ஸ் அணிவது, ஹைஹீல்ஸ் அணிவது, குட்டை பாவாடை அணிவது, அமெரிக்காவின் பிராண்டுகளை அணிவது ஆகிய செயல்கள் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடைகளை மீறுபவர்களுக்கு அபராதமோ அல்லது சிறை தண்டனையை விதிக்கப்படவோ வாய்ப்புள்ளது.