அணு ஆயுத உற்பத்தி..ஒரே ஒரு போட்டோ வெளியிட்ட வடகொரியா - மிரண்டுபோன உலக நாடுகள்!
வடகொரியா வெளியிட்ட ஒரு புகைப்படம் உலக நாடுகள் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
வடகொரியா
உலக நாடுகள் மத்தியில் வடகொரிய மட்டும் தனித்தே இருக்கிறது. உலக நாடுகள் பல்வேறு பொருளாதாரத் தடைகளை விதித்தாலும் கூட வடகொரியா ராணுவ ரீதியாக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
அந்த வகையில் வடகொரியா தன்னிடம் அணு ஆயுத உற்பத்தியை அதிகரிக்கும் வகையில் யுரேனியம் செறிவூட்டல் மையம் இருப்பதாகக் கடந்த சில ஆண்டுகளாகவே கூறி வந்தது . ஆனால் வடகொரியா அதற்கான எந்தவித ஆதாரங்களையும் வெளியிடவில்லை.
இந்த சூழலில் ஒரு பகீர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் ,வடகொரியா தனது யுரேனியம் செறிவூட்டல் மையத்தை கிம் ஜாங் ஆய்வு செய்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளது. இது சர்வதேச அளவில் பேசுபொருள் ஆகியுள்ளது.
யுரேனியம் செறிவூட்டல்
சாதாரண யுரேனியத்தை அணு ஆயுதங்களுக்குப் பயன்படுத்தும் செறிவூட்டப்பட்ட யுரேனியமாக மாற்றுவதே இந்த மையங்களின் வேலையாகும். இதில் ஒரு கருவியின் நடுவில் யுரேனியத்தை வைத்து அதை அதிவேகமாகச் சுற்றுவார்கள்.
இதன் மூலம் செறிவூட்டப்பட்ட யுரேனியம் உற்பத்தி செய்யப்படும். இதைத் தான் கிம் ஜாங் இப்போது சுற்றிப் பார்த்துள்ளார்.இது தொடர்பான புகைப்படத்தை வெளியிட்டு அதிர்ச்சியைக் கிளப்பியுள்ளது.
முன்னதாக சர்வதேச புவிசார் சூழல் காரணமாகத் தற்காப்பிற்காக அதிகளவில் அணு ஆயுதங்களை உற்பத்தி செய்ய வேண்டிச் செறிவூட்டல் மையங்களின் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும் என்று வடகொரியா அதிபர் கிம் ஜாங் உத்தரவிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.