வடகொரியாவில் விவகாரத்து பெறும் தம்பதிகளுக்கு நடக்கும் கொடூரம் - என்ன தெரியுமா?
விவகாரத்து பெறும் தம்பதிகளுக்கு வடகொரியா அளிக்கும் தண்டனை பற்றி பார்க்கலாம்.
விவகாரத்து
உலகிலேயே மரமமான நாடாக வடகொரியா அறியப்படுகிறது. அந்நாட்டின் அதிபராக கிம் ஜாங் உன் உள்ளார். சர்வாதிகார ஆட்சியை நடத்தி வரும் இவர் நாட்டு மக்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளார். கொரோனா காலத்தில் அந்த நாடு கடுமையான நெருக்கடிகளை சந்தித்தது.
இதனால், கொரோனாவிற்கு பிறகு வடகொரியாவில் விவகாரத்து மெல்ல மெல்ல அதிகரித்து வருகிறது. ஆனால், விவகாரத்து என்பது சமூக கட்டமைப்புக்கு பாதிப்பு ஏற்படும் என வடகொரியா கருதுகிறது.
அதன்படி, விவாகரத்து செய்யும் தம்பதிகளை உடனடியாக தடுப்பு காவலில் எடுத்து சென்று கடுமையான வேலைகளை செய்ய நிர்பந்திக்கப் படுகிறார்களாம். அதாவது அவர்கள், ராணுவத்தில் லேபராக சேர்க்கப்பட்டு மிகக் கடுமையான வேலைகளை வாங்கி அடிமைகளை
கொடூரம்
போல நடத்தி மனித உரிமை மீறலில் வடகொரியா ஈடுபடுவதாக தென்கொரியா ஊடகம் செய்திகளை வெளியிட்டது. இதனால் விவாகரத்து செய்வதற்கு கூட தம்பதிகள் அச்சப்படும் சூழல் அங்கு நிலவுவதாக சொல்லப்படுகிறது. இது தொடர்பாக அமெரிக்காவை சேர்ந்த ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டது.
அதில், யாங்காங் மாகாணத்தில் 12 தம்பதிகள் விவகாரத்து செய்து கொண்டனர். அவர்களுக்கு விவகாரத்து கிடைத்த மறுநொடியே இருவரும் மிலிட்டரி லேபர் கேம்பிற்கு கொண்டு செல்லப்பட்டனர். கடந்த ஆண்டு வரை விவாகரத்துக்கு விண்ணப்பிக்கும்
நபரைத்தான் லேபர் கேம்பிற்கு அனுப்பி வந்தனர். தற்போது தம்பதி இருவரையும் அனுப்பி வைக்கிறார்கள் என்று தகவல்கள் கூறுகின்றன. வடகொரியா சட்டப்படி விவகாரத்து செய்ய சாத்தியமான வாய்ப்புகளை அளிப்பதாகவும் அதற்கு தண்டனை எதுவும் கிடையாது என கூறப்படுகிறது.