3 மில்லியன் டோஸ் கொரோனா தடுப்பூசிகளை வழங்கிய சீனா - ‘வேண்டாம்’ என்று நிராகரித்த வடகொரியா!
சீனாவின் 3 மில்லியன் டோஸ் கொரோனா தடுப்பூசிகளை வேண்டாம் என வட கொரியா நிகராரித்திருக்கிறது. மேலும், அந்த தடுப்பூசிகளை தேவை அதிகம் உள்ள நாடுகளுக்கு வழங்கி கொள்ளுமாறு கூறியதாக யூனிசெஃப் தெரிவித்திருக்கிறது.
உலகில் கொரோனா தொற்று பரவத் தொடங்கிய ஆரம்ப காலத்திலிருந்தே வடகொரியா கடும் கட்டுப்பாடுகளைக் கடைப்பிடித்து வருகிறது. கடந்த ஆண்டு ஜனவரி மாதத்திலேயே அது தனது எல்லைகளை முற்றிலுமாக மூடிவிட்டது.
கடந்த ஆகஸ்ட் மாதம் 19ம் தேதி வரை வடகொரியாவில் எவருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டதாக பதிவு செய்யப்படவில்லை எனவும், சுகாதாரப் பணியாளர்கள், காய்ச்சல் உள்பட பல்வேறு அறிகுறிகள் தென்பட்டது. கிட்டதட்ட 32,291 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது.
அவர்களில் யாருக்கும் கொரோனா தொற்று இல்லை என்பது உறுதியானதாக உலக சுகாதார நிறுவனம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. இந்நிலையில், 'கோவேக்ஸ்' திட்டத்தின் கீழ் சீனா தயாரித்த 'சினோவாக்' தடுப்பூசிகள் வடகொரியாவுக்கு வழங்கப்பட்டது.
ஆனால், சீனா தங்களுக்கு வழங்கிய சுமார் 30 லட்சம் எண்ணிக்கையிலான கொரோனா தடுப்பூசிகளை வேறு நாட்டுக்கு திருப்பி அனுப்பிவிடுமாறு வடகொரியா கேட்டுக் கொண்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தகவல் தெரிவித்திருக்கிறது.
தடுப்பூசி பற்றாக்குறையைக் கருத்தில் கொண்டு, கடுமையாக பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு தடுப்பூசிகளை அனுப்பிவிடுமாறு வடகொரியா கேட்டுக் கொண்டதாக ஐ.நா. செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்திருக்கிறார்.