வடகொரியா அதிபர் கொண்டுவந்த புதிய சட்டம் - மிரண்டுபோன மக்கள்!
வடகொரிய அதிபரான கிம் ஜாங் உன் புதிய சட்டம் ஒன்றை கொண்டுவந்துள்ளார், அதனால் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
அதிபர்
வடகொரியாவில் அதிபர் கிம் ஜாங் உன் தற்பொழுது அண்டை நாடுகளான ஜப்பான், தென்கொரியா ஆகிய நாடுகளை அச்சுறுத்தும் வகையில், அடிக்கடி ஏவுகணைச் சோதனைகள் நடத்தி வருகிறார்.

இதனால், சில உலக நாடுகள் வடகொரியாவுக்குப் பொருளாதார தடை விதித்திருக்கிறது. அதனால் அந்த நாட்டில் பஞ்சம் ஏற்பட்டு மக்கள் சிரமத்தில் உள்ளனர். மேலும், மக்கள் பஞ்சத்தில் வாழ முடியாமல் தற்கொலை செய்து வருகின்றனர்.
சட்டம்
இந்நிலையில், அந்த நாட்டில் கொண்டுவந்த புதிய சட்டம், "தற்கொலை சோசலிசத்துக்கு எதிரான தேசத் துரோகம். எனவே, வடகொரியாவில் தற்கொலை செய்துகொள்ளத் தடைவிதிக்கப்படுகிறது" என ரகசிய உத்தரவைப் பிறப்பித்திருப்பதாக கூறப்படுகிறது.

மேலும் இதுகுறித்து, தென்கொரியாவின் தேசியப் புலனாய்வு சேவையின் செய்தித் தொடர்பாளர், "வடகொரியாவில் மக்கள் பல்வேறு சிரமங்களைச் சந்தித்துவருகின்றனர். வடகொரியாவில் கடந்த ஆண்டைவிட பட்டினிச் சாவுகள் மூன்று மடங்காக அதிகரித்திருக்கின்றன.
கடந்தாண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு தற்கொலை செய்வோரின் எண்ணிக்கை 40 சதவிகிதம் அதிகரித்திருக்கிறது. ரியாங்காங் மாகாணத்தில் நடந்த ஒரு கூட்டத்தில், பட்டினியால் வாடுவதைவிட, தற்கொலை பெரும் சமூகத் தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பதாகப் பங்கேற்பாளர்களிடம் கூறப்பட்டது.
பெரும்பாலான தற்கொலைகள் கடுமையான வறுமை, பட்டினியால் ஏற்பட்டவையே" என்று கூறியுள்ளார்.