நாங்கள் போரில் வெற்றி கண்டுவிட்டோம் : வடகொரிய அதிபர் பெருமிதம்
வடகொரியாவில் கொரோனா பாதிப்புகள் இல்லை என அந்நாட்டு அரசாங்கம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதனை வடகொரிய அதிபர் "கொரோனா போரில் வெற்றி கண்டுவிட்டோம்" என்று கூறியுள்ளார்.
மர்மதேசம் வடகொரியா
மர்ம தேசமாக விளங்கும் நாடு வடகொரியா. இந்நாடு கொரோனா தொற்று பாதிப்பால் பெரும் பிரச்சனையை சந்தித்ததாக அவ்வப்போது தகவல்கள் வெளியாகி வந்தது. வடகொரியாவின் கடந்த மே மாதம் 48 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது என்று சொல்லப்படுகிறது.
ஆனால் வடகொரியா இன்றுவரை அதனை அதிகாரபூர்வமாக தெரிவிக்கவில்லை. இந்தநிலையில் கொரோனா வைரஸ் குறித்து வடகொரிய அதிபர் கிம் ஜாங் மகிழ்ச்சி செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார்.
போரில் வென்றுவிட்டோம்
அவர் அதில் கூறுகையில், "நம் மக்களுக்குக் கிடைத்துள்ள இந்த வெற்றி வரலாற்று சிறப்புமிக்கது. மீண்டும் ஒருமுறை நாம் இந்த உலகிற்கு நமது சிறப்பை உணர்த்தியுள்ளோம்.
நம் மக்களின் அசைக்கமுடியாது உறுதிக்கு எடுத்துக்காட்டு" என்று கூறியுள்ளார். இதனால் கொரோனா போரில் இருந்து நாங்கள் வென்று விட்டோம் என வாடகொரிய அதிபர் கிம் ஜாங் பெருமிதம் தெரிவித்துள்ளார்.