சிரிக்கவே கூடாது.. மீறினால் நேரடியா தூக்கு தான் - பகிரங்க எச்சரிக்கை!
வட கொரியாவில் மக்கள் சிரிப்பதற்கும், மது அருந்துவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
நினைவு நாள்
வட கொரியாவில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக கிம் குடும்பத்தின் சர்வாதிகார ஆட்சி நடைபெற்று வருகிறது. அதில் கடந்த 10 ஆண்டுகளாக கிம் ஜாங் உன் அதிபராக பொறுப்பேற்று மக்களை ஆட்டிபடைத்து வருகிறார்.
அங்கு அரசுக்கு விருப்பமானதை தான் மக்கள் செய்ய வேண்டும் என கடுமையான விதிமுறை பின்பற்றப்பட்டு வருகிறது. இந்நிலையில், அதிபர் கிம் ஜாங் உன்னின் தந்தை கிம் ஜாங் இல்லின் நினைவு தினத்தையொட்டி நாடே துக்க அனுசரிப்பை கடைப்பிடித்து வருகிறது.
சிரிக்க தடை
அந்த வகையில், அடுத்த 10 நாட்களுக்கு அதாவது ஜனவரி 7-ம் தேதி வரை வட கொரிய மக்கள் யாரும் சிரிக்கக் கூடாது. மது அருந்தக் கூடாது. கூட்டமாக சேர்ந்த வெளியே போகக் கூடாது. பொழுதுபோக்கு நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடாது.
விளையாட்டு நிகழ்ச்சிகளுக்கும் தடை விதிக்கப்படுகிறது. பிறந்த நாள் கொண்டாடக் கூடாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தடையை மீறுவோருக்கு நேரடியாக தூக்கு தண்டனை தான் என வட கொரிய அரசு வட்டாரங்கள் கூறுகிறது.