தென்கொரிய எல்லை அருகே 130 முறை பீரங்கி குண்டுகளை வீசிய வடகொரியா - மீண்டும் போர் பதற்றம்..!

North Korea South Korea
By Nandhini Dec 05, 2022 01:19 PM GMT
Nandhini

Nandhini

in உலகம்
Report

இன்று வட கொரியா, தென்கொரிய எல்லைக்கு அருகே கடலில் சுமார் 130 பீரங்கி குண்டுகளை வீசிய சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. 

130 முறை பீரங்கி குண்டு வீசிய வடகொரியா

சமீபத்தில் தென் கொரிய அதிகாரிகள் தங்கள் பகிரப்பட்ட எல்லைக்கு அருகே பியோங்யாங்கின் இராணுவ பயிற்சியில் ஈடுபட்டனர். இதனையடுத்து, வடகொரியா இன்று 130 முறை பீரங்கி குண்டு வீசி தென்கொரியாவிற்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

வடகொரியாவின் இந்த நடவடிக்கையால் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை அதிகரித்துள்ளது. வட கொரியா பீரங்கித் தாக்குதல் பற்றி எதுவும் அறிவிக்கவில்லை. ஆனால், அது ஏவுகணை ஏவுதல்கள் மற்றும் போர் விமானங்கள் மற்றும் பீரங்கிப் பிரிவுகளின் பயிற்சிகள் உட்பட பல இராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

north-korea-fired-about-130-artillery-shells

தென் கொரியா கண்டனம்

விரிவான இராணுவ ஒப்பந்தம் (CMA) கடந்த 2018ம் ஆண்டு, தலைவர் கிம் ஜாங் உன் மற்றும் அப்போதைய தென் கொரிய ஜனாதிபதி மூன் ஜே-இன் ஆகியோருக்கு இடையேயான செய்யப்பட்டது. இந்த ஒப்பந்தம் மிக முக்கிய ஒப்பந்தமாக கருதப்பட்டது. ஆனால், பல மாதங்களாக இந்த பேச்சுவார்த்தை நின்றுவிட்டது.

இந்த ஆண்டு பீரங்கி பயிற்சிகள் மூலம் ஒப்பந்தத்தை வடகொரியா மீண்டும் மீண்டும் மீறுவதாக தென் கொரியா குற்றம் சாட்டியுள்ளது. மேலும், இந்த ஆண்டு வட கொரியா தனது நீண்ட தூர கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை (ICBMs) 2017க்குப் பிறகு முதல் முறையாக மீண்டும் சோதனை செய்துள்ளது.

மேலும் தென் கொரியாவும் அமெரிக்காவும் அணுவாயுத சோதனையை மீண்டும் தொடங்குவதற்கான தயாரிப்புகளை செய்துள்ளதாக தென் கொரியா தெரிவித்துள்ளது.