வட கொரியாவின் வினோத பேய் சத்த தாக்குதல் - தூக்கத்தை தொலைத்த தென் கொரிய மக்கள்
ஸ்பீக்கர் மூலம் பேய் சத்தங்களை எழுப்பி தென் கொரியா மீது உளவியல் தாக்குதலை வட கொரியா நடத்தி வருகிறது.
வட கொரியா
வட கொரியா தென் கொரியாவிற்கு இடையே பல ஆண்டுகளாக தொடர்ந்து மோதல் போக்கு நிலவி வருகிறது.தென்கொரியாவை சீண்டும் வகையில் அவ்வப்போது வட கொரியா ஏவுகணை சோதனை நடத்தும்.
ஏற்கனவே குப்பைகள், மனித கழிவுகள் அடங்கிய 100க்கும் மேற்பட்ட பலூன்களை தென் கொரியா எல்லைக்குள் வட கொரியா அனுப்பியது.
பேய் சத்தம்
தற்போது தென்கொரியா மீது நூதனமான உளவியல் தாக்குதலை வட கொரியா நடத்தி வருகிறது. தென்கொரியாவின் எல்லையில் உள்ள டாங்சன் என்ற கிராமத்தைக் குறிவைத்து வட கொரியா இந்த தாக்குதலை நடத்தி வருகிறது.
இது குறித்து கருத்து பேசிய டாங்சன் கிராம மக்கள், எல்லையில் ஸ்பீக்கர்களை வைத்து பேய் அலறுவது, கார் விபத்துகள் ஏற்படுவது, உலோகங்கள் ஒன்றுடன் ஒன்று மோதுவது, ஓநாய்கள் ஊளையிடுதல், போன்ற வினோத சத்தங்களை இடைவிடாமல் ஒளிபரப்பி வருகின்றனர்.
இது எங்களைப் பைத்தியமாக்குகிறது.இந்த சத்ததால் இரவில் தூங்க முடிவதில்லை. பல மாதங்களாகவே தொடர்ந்து இதைச் செய்து வருவதால் தூக்கமின்மை, தலைவலி, மனஅழுத்தம் என உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த மக்கள் தெரிவித்துள்ளனர்.