மக்கள் வாயிலிருந்து இனி இந்த வார்த்தை வரவே கூடாது - அதிபர் வினோத உத்தரவு!
வினோத உத்தரவு ஒன்றை அதிபர் கிம் ஜாங் உன் பிறப்பித்துள்ளார்.
கிம் ஜாங் உன்
வடகொரியா அதிபராக கிம் ஜாங் உன் உள்ளார். வெளி உலக தொடர்பு எதுவும் இன்றி அந்த நாட்டு மக்கள் வசித்து வருகிறார்கள்.
சிறிய குற்றங்களுக்கு கூட மிகப்பெரிய அளவில் தண்டனை விதிக்கப்படுவதாகவும் வடகொரியாவில் மனித உரிமை மீறல்கள் அதிகம் நடப்பதாகவும் பன்னாட்டு அமைப்புகள் குற்றம் சாட்டி வருகின்றன.
வினோத உத்தரவு
இந்நிலையில், புதிய உத்தரவு ஒன்றை கிம் ஜாங் உன் பிறப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேற்கத்திய நாடுகளில் பயன்படுத்தப்படும் சில ஆங்கில வார்த்தைகள் பயன்படுத்தக்கூடாது என்று வடகொரியாவில் உள்ள சுற்றுலாத் தலங்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஹம்பர்கர், ஐஸ்கிரீம், கரோக்கி உள்ளிட்ட சொற்களை பயன்படுத்தக் கிம் ஜாங் உன் உத்தரவு பிறப்பித்துள்ளார். அதற்கு இணையான வேறு சொற்களையே பயன்படுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.