அமெரிக்க கடையில் திருடிய இந்தியப் பெண் - வைரலாகும் வீடியோ காட்சிகள்!
அமெரிக்க கடையில் திருடிய போது இந்தியப் பெண் பிடிபட்ட சம்பவம் வைரலாகி வருகிறது.
திருடிய பெண்
அமெரிக்காவில் உள்ள ஷாப்பிங் மால் ஒன்றில் இந்தியப் பெண் ஒருவர், திருடும்போது கையும் களவுமாக பிடிபட்டார்.
தொடர்ந்து "கடைகளில் தொடர்ந்து திருடியவர் இறுதியாக கையும் களவுமாக பிடிபட்டார்" என்ற தலைப்பில் போலீஸ் ரிலீஸ் என்ற பெயரிலுள்ள யூடியூப் சேனல் இதுகுறித்த வீடியோவை பகிர்ந்துள்ளது.
அதில், என்ன மொழி பேசுவீர்கள் என்று அவரிடம் கேட்டபோது, அந்தப் பெண் "குஜராத்தி" என்று பதிலளித்தார். இதற்கு பதில் சொல்லும் போதே அவருடைய குரல் நடுங்கியது. அது எங்கிருக்கிறது? என்று ஒரு அதிகாரி கேட்க, "இந்தியா" என்று அந்தப் பெண் அழுது கொண்டே பதிலளிக்கிறார்.
போலீஸார் எச்சரிக்கை
பின்னர் அங்கிருந்த கடையின் ஊழியர் ஒருவர் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை அதிகாரிகளிடம் வழங்குகிறார். அதில் அந்தப் பெண் பணம் செலுத்தாமல் செக்அவுட்டைக் கடந்து பொருட்களை எடுத்துச் செல்வதை பார்க்க முடிகிறது.
பின் மறுவிற்பனை செய்யும் நோக்கத்துடன் கடையில் பொருட்களை திருடியதாக அந்தப் பெண் ஒப்புக்கொள்கிறாள். தயவுசெய்து என்னை விட்டுவிடுங்கள். நான் இனி ஒருபோதும் இப்படிச் செய்ய மாட்டேன் என்று கெஞ்சுகிறார்.
இதனையடுத்து மீண்டும் இதேபோல் தவறை செய்யாதே என எச்சரித்து எந்த குற்றச்சாட்டுகள் இல்லாமல் விடுவிக்க போலீசார் முடிவு செய்தனர். மேலும் இனி ஒருபோதும் நீ இங்கு வர முடியாது என்றும் எச்சரித்துள்ளனர்.