இவர்களால்தான் கொரோனா பரவியது...கிம் ஜாங் பகீர் தகவல்!

COVID-19 China North Korea South Korea
By Sumathi Jul 01, 2022 07:55 PM GMT
Report

வடகொரிய மக்கள் இருவர் தென்கொரிய எல்லையில் அடையாளம் தெரியாத பொருட்களோடு தொடர்பு கொண்டதால் அவர்களுக்கு கோவிட் தொற்று வந்ததாம். இதை அதிகாரிகள் புலனாய்வு செய்து கண்டுபிடித்ததாக வடகொரிய அரசு ஊடகம் கூறுகிறது.

கோவிட் தொற்று

உலகிலேயே மிகவும் பதட்டமான எல்லை என்றால் அது வடகொரியா - தென்கொரியா எல்லைதான். இந்த எல்லையில் இருநாட்டு பாதுகாப்பும் மிகக் கடுமையாக இருக்கும்.

north korea

எனினும் தென் கொரியச் சமூக ஆர்வலர்கள் வடகொரியா அரசை எதிர்த்து தமது பிரச்சாரத்தை பலூன் மூலம் நோட்டிஸ்களாக வடகொரியாவில் இறக்கி வருகிறார்கள். வட கொரியாவில் 47 இலட்சம் பேருக்கு புதிய வகை காய்ச்சல் வந்ததாகக் கூறப்படுகிறது.

வட கொரியா

இது கோவிட் தொற்றாக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது. வடகொரியாவின் மக்கள் 2 கோடியே 50 லட்சம் ஆகும். இங்கே பொதுச் சுகாதாரக் கட்டமைப்பு மோசமாக இருப்பதினாலும், தடுப்பூசி திட்டம் இல்லாததினாலும் கோவிட் அலை பரவுவதற்கு பெரும் வாய்ப்பு இருக்கிறது.

covid 19

இருப்பினும் சமீபத்திய வாரங்களில் வடகொரிய அரசு சீனாவின் தடுப்பூசிகளை ஏற்பதாக ஊடக செய்திகள் வெளிவந்தன. தற்போது வட கொரியாவில் எத்தனை மக்கள் தடுப்பூசி போட்டிருக்கிறார்கள் என்பது தெரியவில்லை.

இரயில் பயணம்

கடந்த சில வாரங்களாக வட கொரிய அதிகாரிகள் புதிய கோவிட் தொற்று பாதிப்பு பெருமளவு குறைந்திருப்பதாகக் கூறினாலும் பலர் வட கொரிய அரசு தொற்றின் எண்ணிக்கை குறைத்து வெளியிடுவதாகச் சந்தேகிக்கிறார்கள்.

2020ஆம் ஆண்டிலிருந்து வடகொரிய அரசு சீனாவுடனான இரயில் பயணத்தை மீண்டும் துவக்கியது. அதற்கு முன்பு வரை கோவிட் பொது முடக்கத்தை வடகொரியா பின்பற்றி வந்தது. இரயில் பயணம் சகஜமானதிலிருந்து கோவிட் தொற்று வடகொரியாவில் பரவியிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

சீனா

ஆனால் வட கொரியா இதை ஒத்துக் கொள்ளாது. ஏனெனில் சீனாவில் கோவிட்டின் திரிபான ஒமிக்ரான் வைரஸ் பெருமளவு பரவியது இதே காலத்தில்தான். அதை ஒட்டியே வடகொரியாவிலும் வைரஸ் பரவவிருக்க வேண்டும்.

இதை வெளிப்படையாகப் பேசினால் சீனாவுடனான ராஜாங்க உறவு பாதிக்கப்படும் என்பதால் வடகொரியா இதை அடக்கி வாசிக்கிறது. சீனாவிலிருந்துதான் வைரஸ் வந்திருக்க வேண்டும் என்று

தென் கொரியா

சீன எல்லையை மூடி தனிமைப்படுத்தலைக் கடுமையாக்கினால் வட கொரிய – சீன வர்த்தகம் பாதிக்கப்படும் என்று வட கொரியா அஞ்சுகிறது. ஏற்கனவே பொருளாதாரத் தடையினால் பாதிக்கப்பட்டிருக்கும் வட கொரியாவிற்கு ஒரே வாய்ப்பு சீனாவின் உதவிதான்.

ஆக சீனாவிலிருந்து பரவிய வைரஸ் வடகொரியாவை ஒரு காட்டுக் காட்டியிருப்பதும் உண்மை. அதை மறுக்கவே தென் கொரிய எல்லையிலிருந்து அடையாளம் தெரியாத பொருட்கள் மூலம் வைரஸ் பரவுவதாக வட கொரியா கூறி வருகிறது.     

பொது இடத்தில் புகை பிடிப்பவர்களுக்கு ரூ.2,000 அபராதம்!