ஹாலிவுட் படம் பார்த்தால் குழந்தைகளுக்கு 5 ஆண்டு சிறை - அதிர்ச்சி உத்தரவு
ஹாலிவுட் படங்களை பார்க்கும் குழந்தைகளுக்கு சிறை தண்டனை என அறிவிக்கப்பட்டுள்ளது.
வட கொரியா
வட கொரியாவில், அதிபர் கிம் ஜோங் உன் சர்வாதிகார ஆட்சி செய்து வருகிறார். இங்கு மேற்கத்திய நாடுகளின் படங்களை தடுக்கும் வகையில் புதிய எச்சரிக்கை ஒன்றை அந்நாடு வெளியிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதன்படி ஹாலிவுட் அல்லது தென்கொரிய படங்களை குழந்தைகள் பார்ப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனை மீறி பார்க்கும் குழந்தைகள் 5 ஆண்டுகள் சிறையில் அடைக்கப்படுவார்கள் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சினிமாவிற்கு தடை
மேலும், அவர்களின் பெற்றோர் 6 மாதம் தொழிலாளர் முகாம்களில் அடைக்கப்படுவார்கள். முந்தைய காலங்களில் குற்றம் நிரூபிக்கப்படும் பெற்றோர்கள் கடுமையான எச்சரிக்கைக்கு பின்னர் விடுவிக்கப்பட்டனர்.
ஆனால், இனிமேல் கருணை காட்டப்படாது. அதிபர் கிம் ஜோங் உன்னின் சமூக கொள்கைப்படி குழந்தைகளை வளர்க்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.