“நாங்கள் தனுஷின் வெறித்தனமான ரசிகர்கள்” - ஹாலிவுட்டின் பிரபல இயக்குனர்கள் நெகிழ்ச்சி பேட்டி!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளர்ந்து தற்போது தமிழ் சினிமாவை தாண்டி டோலிவுட், பாலிவுட் , ஹாலிவுட் என கொடி கட்டி பறப்பவர் நடிகர் தனுஷ்.
இவர் நடிப்பில் கடைசியாக கார்திக் நரேன் இயக்கத்தில் மாறன் படம் வெளியானது. இதனை தொடர்ந்து தற்போது தமிழ் & தெலுங்கில் உருவாகி வரும் வாத்தி, தமிழில் திருச்சிற்றம்பலம், நானே வருவேன் ஆகிய படங்களில் நடித்து வருகிறார் தனுஷ்.
இதற்கு மத்தியில் ஹாலிவுட்டில் அவர் நடித்து முடித்துள்ள திரைப்படம் தான் தி க்ரே மேன். ஹாலிவுட்டில் மிகவும் பிரபலான அவென்ஜர்ஸ் எண்டுகேம் எனும் பிரமாண்ட திரைப்படத்தை இயக்கிய ரஸ்ஸோ பிரதர்ஸ் தான் தி க்ரே மேன் படத்தை இயக்கியுள்ளனர்.
ஹாலிவுட் சூப்பர் ஸ்டார்களான க்ரிஸ் எவன்ஸ், ரேயான் கோஸ்லிங் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். சுமார் 1500 கோடி செலவில் ஆக்சன் படமாக உருவாகியிருக்கும் இந்த திரைப்படம் OTT தளமான நெட்ப்ளிக்ஸ்-இல் நேரடியாக வெளியாக உள்ளது.
இந்த திரைப்படத்தில் நடிகர் தனுஷுக்கு 2 சண்டைக்காட்சிகள் இருப்பதாக படத்தின் இயக்குனர்கள் முன்பே தெரிவித்திருந்தனர். தி க்ரே மேன் படத்தின் டிரைலர் நேற்று வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.
இந்நிலையில் தான் நாங்கள் தனுஷின் மிகப்பெரிய ரசிகர்கள் தி க்ரே மேன் படத்தின் இயக்குநர்களான ரஸ்ஸோ பிரதர்ஸ் தெரிவித்துள்ளனர்.
“நாங்கள் தனுஷின் மிகப்பெரிய ரசிகர்கள்..தி க்ரே மேன் படத்தில் தனுஷ் நடித்துள்ள கதாபாத்திரத்தை ஹீரோவாக வைத்து விரைவில் ஒரு படத்தை ரசிகர்கள் எதிர்பார்க்கலாம்.
தனுஷை மனதில் வைத்தே அந்த கதாபாத்திரத்தை எழுதினோம்” என ரஸ்ஸோ பிரதர்ஸ் தெரிவித்திருப்பது தனுஷ் ரசிகர்களை உற்சாகம் அடைய வைத்துள்ளது.