தமிழரின் பைக் சாவியை பிடுங்கி மிரட்டும் வட மாநிலத்தவர்கள் - அதிர்ச்சி வீடியோ வைரல்

Tamil nadu Viral Video Crime
By Sumathi Feb 03, 2023 05:42 AM GMT
Report

வடமாநிலத்தவர்கள், தமிழரை பணம் கேட்டு மிரட்டுவது தொடர்பான வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

மிரட்டிய கும்பல்

திருப்பூரில், தமிழரின் பைக்கை மிரட்டி வாங்கி வைத்துக்கொண்டு அவரிடமிருந்து பணத்தையும் வடமாநிலத்தவர்கள் பெருவது போன்ற வீடியோ சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது. அதில், தமிழரின் பைக் சாவியை பிடுங்கி வைத்துக்கொண்டு வடமாநிலத்தவர் மிரட்டுவதும், அவரிடம் தமிழர் கெஞ்சுவது போன்ற காட்சியும் இடம்பெற்றுள்ளது.

தமிழரின் பைக் சாவியை பிடுங்கி மிரட்டும் வட மாநிலத்தவர்கள் - அதிர்ச்சி வீடியோ வைரல் | North Indians Threatening Tamilans In Tirupur

ஆனால், தமிழரிடம் வடமாநில கும்பல் பணம் பறிப்பது போல் வெளியான வீடியோ வதந்தி என்று போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெருமாநல்லூர் போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட பொங்குபாளையம் ரோட்டில் 3 நாட்களுக்கு முன்பு மாலையில் நடந்த சிறிய வாகன விபத்து சம்பவம் தொடர்பாக வீடியோ பதிவு சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

வதந்தி

இந்த சம்பவத்தில் சம்பத்குமார் என்பவர் இருசக்கர வாகனத்தில் செல்லும்போது, பொங்குபாளையம் ரோட்டில் வடமாநில தொழிலாளர் மீது இடித்துவிட்டதில், விபத்தில் கீழே விழுந்த வடமாநில தொழிலாளரின் செல்போன் சேதமடைந்தது. அந்த செல்போனை சரி செய்ய பண உதவி கேட்டுள்ளார்.

அதை சம்பத்குமார் கொடுத்துவிட்டு வந்துள்ளார். இதை அவரே வாக்குமூலமாக வீடியோவில் பதிவிட்டுள்ளார். இதை சமூக வலைதளங்கள் மற்றும் வாட்ஸ்-அப் குழுக்களில் 'மோட்டார் சைக்கிளை பிடுங்கி அட்டகாசம், தமிழரை சுற்றி வளைத்து பணம் பறித்த வடமாநில கும்பல்' என தவறான பதிவுகளை பரப்புகிறார்கள்.

இந்த வதந்தியை நம்ப வேண்டாம். அது பொய்யானது. இவ்வாறு வதந்தியை சமூக வலைதளங்களில் பரப்பியவர்கள் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளனர்.