தமிழகத்தை விட்டு திடீரென வெளியேறிய 1.50 லட்ச வடமாநிலத்தவர்கள் - என்ன காரணம்?
வடமாநில தொழிலாளர்கள் தங்களின் சொந்த ஊர்களுக்கு திரும்பி உள்ளனர்.
நூற்பாலைகள் மூடல்
பீகார், மேற்கு வங்கம், ராஜஸ்தான், மத்திய பிரதேசம் உள்பட பல வடமாநிலங்களை சேர்ந்தவர்கள், தமிழ்நாட்டின் பல இடங்களில் வடமாநிலங்களை சேர்ந்த மக்கள் பணி செய்து வருகின்றனர்.
அதன்படி, நூற்பாலைகளில் வேலை செய்து வந்த 1.50 லட்சம் வடமாநில தொழிலாளர்கள் தமிழகத்தை விட்டு தங்களின் சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளதாக கூறப்படுகிறது.
வடமாநில தொழிலாளர்கள் நிலை?
நடுத்தர பிரிவில் 1000 நூற்பாலைகள் சிறிய பிரிவில் 300 நூற்பாலைகள், ஓபன் எண்ட் பிரிவில் 600 நூற்பாலைகள் உள்ளன. இங்கு ஏராளமான வடமாநில தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். மின்கட்டண உயர்வு, நூற்பாலைகளுக்கு சலுகை இல்லாதது உள்ளிட்டவற்றால் நிலைமையை சமாளிக்க முடியாமல் நூற்பாலைகளை அதன் உரிமையாளர்கள் மூடியுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, நூற்பாலைகளை மீண்டும் செயல்பட வைக்க தமிழக அரசு மின்கட்டண குறைப்பு உள்பட சில சலுகைகளை அறிவிக்க வேண்டும் என தென்னிந்திய ஸ்பின்னர்ஸ் சங்கத்தின் சார்பாக தொழில்துறையில் கோரிக்கை வைத்துள்ளனர்.