வடமாநில தொழிலாளர்கள் இல்லையென்றால் தொழில்கள் இருக்காது : கட்டுமான தொழிலாளர் சங்கம்
வட மாநில தொழிலாளர்கள் தமிழகத்தின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகித்துள்ளார்கள் என கட்டுமான தொழிலாளர் சங்க தலைவர் தெரிவித்துள்ளார்.
வடமாநில தொழிலாளர்கள் தாக்குதல்
கடந்த சில நாட்களாக வட மாநிலத் தொழிலாளர் மீதான் தாக்குதல் தொடர்பான செய்தி இணையத்தில் வைரலானது, அதே சமயம் வட மாநில தொழிலாளர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல் தொடர்பான வீடியோ போலியானவை என தமிழ்க காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.'
வடமாநிலத்தவர்கள் முக்கியம் இந்த நிலையில், கட்டுமான தொழிலாளர் சங்க தலைவர் சீனிவாசன் செய்தியாளர்களுக்கு அளித்துள்ள பேட்டியில், வடமாநில தொழிலாளர்கள் என சாதாரணமாக நினைக்கிறோம்.
வட மாநிலத்தவர்கள் முக்கியம்
ஆனால் அவர்கள் நம் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறார்கள். வடமாநிலத்தவர்கள் இல்லாவிட்டால், கட்டுமான தொழில் பெரிதும் பாதிப்புக்குள்ளாகும்.
வடமாநில தொழிலாளர்கள் விவகாரத்தில், தமிழக அரசு சிறந்த முறையில் நடவடிக்கை எடுத்து வருகிறது. தமிழக அரசின் நடவடிக்கைகளை வரவேற்கிறோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.