வடமாநில தொழிலாளி கட்டையால் அடித்து கொலை - பொள்ளாச்சியில் பரபரப்பு!
பொள்ளாச்சி அருகே வடமாநில தொழிலாளி ஒருவர் ரத்த வெள்ளத்தில் கிடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
சடலம்
பொள்ளாச்சி அடுத்துள்ள ரமணிமுதலிபுதூர் பிரிவு பகுதியில் முகம் மற்றும் தலைப்பகுதியில் ரத்த காயங்களுடன் ஒருவர் உயிரிழந்து கிடந்துள்ளார்.
அதனை அப்பகுதி மக்கள், கோட்டூர் காவல் நிலையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது, அவர் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த சிவ்தாட் மாஞ்சி என்றும், இவர் 31 வயதான வட மாநில தொழிலாளி என்பது உறுதி செய்யப்பட்டது.
மேலும் அவர், அதே பகுதியில் உள்ள தனியார் கம்பெனியில் கடந்த 15 நாட்களாக பணி செய்து வருவதாகவும், இவரின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கம் உள்ள மக்கள் வந்து பார்த்தபோது மர்ம நபர்கள் இவரை கட்டையால் பலமாக தாக்கியதில் முகம் மற்றும் தலையில் பலத்த காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததும் தெரிய வந்தது.
விசாரணை
இதனை தொடர்ந்து, அந்த உடலை போலீசார் பிரேத பரிசோதனைக்காக கோட்டூரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்டார்.
மேலும், கொலை நடந்த இடத்தில் தடயவியல் நிபுணர்கள் தடயங்களை சேகரித்து அப்பகுதி மக்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சம்பவ இடத்திற்கு சென்ற கோவை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன், கொலை நடந்த இடத்தை ஆய்வு மேற்கொண்டு அருகில் உள்ளவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.