பொள்ளாச்சி சம்பவம்.. படமாக எடுப்பதாக கூறி மாணவியை கர்ப்பமாக்கிய நபர்!

Coimbatore Chennai Sexual harassment Crime
By Sumathi Sep 12, 2022 11:07 AM GMT
Report

பொள்ளாச்சி சம்பவத்தை படமாக எடுப்பதாக கூறி மாணவியை கர்ப்பமாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்துயுள்ளது.

பொள்ளாச்சி சம்பவம்

சென்னையைச் சேர்ந்த பெண்(20) கோவை ஆட்சியர் அலுவகத்தில் கொங்கு இளைஞர் எழுச்சி பேரவை அமைப்பை சேர்ந்த பார்த்திபன் என்பவர் மீது புகார் ஒன்றை கொடுத்தார். அதில், எனது சொந்த ஊர் திருவாரூர். நான் கடந்த 2019 ஆம் ஆண்டு கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்தேன்.

பொள்ளாச்சி சம்பவம்.. படமாக எடுப்பதாக கூறி மாணவியை கர்ப்பமாக்கிய நபர்! | A Man Sexual Harrassment To Agirl While Movie Plan

அப்போது, பார்த்திபன் என்பவரின் முகநூல் பக்கத்தில் திரைப்படம் எடுக்க இருப்பதாகவும் பல்வேறு துறைகளுக்கு ஆள் எடுக்கப்போவதாகவும் விளம்பரம் படுத்தப்பட்டு இருந்தது. எனக்கு சிறு வயதில் இருந்தே நடிப்பில் ஆர்வம் இருந்ததால் பார்த்திபனை தொடர்பு கொண்டு விவரங்கள் பெற்றுக்கொண்டேன்.

பாலியல் வன்கொடுமை

இதனை தொடர்ந்து கடந்த 2019 டிசம்பரில் பொள்ளாச்சி மகாலிங்கபுரம் ராமகிருஷ்ணா மேன்ஷன் சென்று பார்த்திபனை சந்தித்தேன். அவர் தன்னை படத்தின் தயாரிப்பாளர் என்று அறிமுகப்படுத்திக்கொண்டார். அப்போது, பொள்ளாச்சி பெண்கள் பாலியல் துன்புறுத்தல் உண்மை சம்பவம் குறித்துதான் அந்த படத்தை எடுக்கப்போவதாக கூறினார்.

பொள்ளாச்சி சம்பவம்.. படமாக எடுப்பதாக கூறி மாணவியை கர்ப்பமாக்கிய நபர்! | A Man Sexual Harrassment To Agirl While Movie Plan

என்னை அந்த படத்தில் நடிக்கவும், வசனம் எழுதவும் கேட்டுக்கொண்டனர். நான் தங்குவதற்கு அதே மேன்க்ஷனில் ஏற்பாடு செய்து கொடுத்தனர். மூன்று நாட்கள் கழித்து திரைப்படம் குறித்து கூட்டாக ஆலோசனை செய்ய வேண்டி அனைவரும் கூடினோம்.

 பெண் கர்ப்பம்

அப்போது அனைவரும் பார்த்திபன் குடிக்க குளிர்பானம் கொடுத்தார். கூட்டம் முடிந்து அனைவரும் சென்ற பிறகு என்னை மட்டும் பார்த்திபன் திரைப்படம் குறித்து ஆலோசனை செய்ய வேண்டும் என இருக்க சொன்னார். நான் மறுத்து கிளம்ப முயன்றபோது என்னால் எழுந்துக்க முடியாத அளவிற்கு தலை சுற்றி மயக்கம் வருவது போல இருந்தது.

நான் கொஞ்சம் கொஞ்சமாக என் சுயநினைவை இழக்க ஆரம்பித்தேன். அப்போது பார்த்திபன் அறையின் கதவை சாத்தி என்னை கட்டியணைத்து முத்தமிட்டும் அத்துமீற தொடங்கினார். நான், மயக்க நிலையில் இருந்தபடியால் அதை தடுக்க முடியாத நிலையில் இருந்தேன். சுமார் ஒரு மணி நேரம் கழித்து எழுந்து பார்க்கும்போது என் அருகில் பார்த்திபன் படுத்திருந்தார்.

என்னுடைய ஆடைகள் அனைத்தும் கீழே கடந்தது. நான் அலங்கோலமாக இருப்பதை கண்டு எழுந்திருக்க முயற்சி செய்தேன். அப்போது உடல் முழுவதும் அதிக வலி இருந்தது. பார்த்திபன் என் அனுமதி இல்லாமல் என்னை வன்புணர்ச்சி செய்திருந்ததை தெரிந்து கூச்சலிட ஆரம்பித்தேன்.

நான் காவல்துறையில் புகார் கொடுக்கலாம் என கிளம்பிய போது பார்த்திபன் என் காலை பிடித்துக்கொண்டு என் மீது ஆசைப்பட்டதாகவும், என்னை திருமணம் செய்துகொள்வதாகவும் கெஞ்சினார். நான் யோசனை செய்துவிட்டு என்னுடைய எதிர்காலம் கெட்டுபோய்விடக்கூடாது என்பதற்காக சம்மதித்தேன்.

பின்னர் ரஷீத் என்பவர் எனக்கு 18 வயது பூர்த்தி அடைந்தவுன் திருமணம் செய்ய ஏற்பாடு செய்யலாம் என்று கூறினார். அதன்பின்னர் பொள்ளாச்சி லாட்ஜில் 20 நாட்களும், ஆனைமலையில் 3 மாதங்களும் இருந்தேன். அப்போது பார்த்திபன் என்னை திருமணம் செய்துகொள்வதாக கூறி என்னுடன் உடலுறவு வைத்துக்கொண்டார்.

அதனால் நான் கருவுற்றேன். அதை கலைக்க ஒரு மாத்திரை வாங்கி கொடுத்து கட்டாயப்படுத்தி சாப்பிடவைத்தார். அதனால் எனக்கு ரத்தப்போக்கு ஏற்பட்டு கரு கலைந்துவிட்டது. அதன் பின்னர் நான் என் சகோதரியின் வீட்டுக்கு சென்றுவிட்டேன். கொரோனா ஊரடங்கு காரணமாக பார்த்திபனை சந்திக்க முடியவில்லை. வாட்சப் கால் மூலம் என்னிடம் பேசி வந்தார்.

எல்லாம் சரியானதும் திருமணம் செய்துகொள்வதாக கூறி வந்தார். இதற்கிடையே பார்த்திபன் உமா என்ற பெண்ணை திருமணம் செய்துகொண்டதாக தகவல் வந்தது. அதிர்ச்சியடைந்து அவரிடம் கேட்டபோது உண்மை என தெரிந்தது. மேலும் பார்த்திபன் ஏற்கனவே கேரளாவை சேர்ந்த பெண்ணை திருமணம் செய்து ஏமாற்றி அவர்களுக்கு ஒரு ஆண் குழந்தையும் இருந்துள்ளது.

அந்த வழக்கு நிலுவையில் இருக்கும்போதே உமாவை திருமணம் செய்துள்ளார்.சாதி அமைப்பு பெயரை பயன்படுத்தி பார்த்திபன் பல பெண்களின் வாழ்க்கையை நாசப்படுத்தியுள்ளார். எனவே பார்த்திபன் மீதும் அவருக்கு உடந்தையாக உள்ள நண்பர்கள் சிந்து, தாய் நிர்மலா ஆகியோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.