அப்போது சாப்பிட்டிற்கே கஷ்டம்..இப்போது 5 நிமிட பாடலுக்கு 2 கோடி!! இந்த டாப் நடிகை யார் தெரியுமா?
சினிமா துறை பணம் அதிகமாக புழங்கும் இடமாகவே உள்ளது. அதில் வெற்றி பெற்றவர்களின் கதைகள் பல நம்மை சிலிர்க்கவைக்கின்றன.
நோரா ஃபதேகி
அப்படி ஒரு வெற்றி கதை தான் பிரபல பாலிவுட் நடிகை நோரா ஃபதேகி'யின் கதை. கனடா நாட்டை பூர்வீகமாக கொண்ட இவர், சினிமா மீது ஆர்வத்தால் இந்தியா வந்து படங்களில் நடிக்க துவங்கியுள்ளார்.
பாலிவுட் படங்களில் முதலில் அறிமுகமான இவர், அதனை தொடர்ந்து நடன கலைஞராக மாறி பெரும் உச்சத்தை அடைந்துள்ளார். ஹிந்தியை தொடர்ந்து தெலுங்கு, மலையாளம் மொழி படங்களின் பாடலிலும் நடனநாடியுள்ளார். குறிப்பாக, பாகுபலி படத்தில் மனோகரி பாடலில் நடனமாடி தென்னிந்திய ரசிகர்களிடமும் நல்ல அறிமுகத்தை பெற்றார்.
அதே போல, கார்த்தியின் 'தோழா' படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளார். இன்று புகழ் பெற்ற நடிகையாக இருக்கும் நோரா ஃபதேகி தான் எதிர்கொண்ட கஷ்டங்களை குறித்து பேட்டி ஒன்றில் பகிர்ந்து கொண்டுள்ளார். அவர் பேசியது வருமாறு, இந்தியாவிற்கு வந்த போது ரூ.5,000 மட்டும் தான் இருந்தது.
சாப்பிட்டிற்கே
9 பேருடன் 3 படுக்கை அறை கொண்ட வீட்டில் தங்கியிருந்தேன். அப்போது, ரொம்ப கஷ்டப்பட்டேன். அப்போராட்டங்கள் மிகவும் மோசமானது. ஒரு நாளைக்கு ஒரு பிரட், ஒரு முட்டை மட்டும்தான் சாப்பிடுவேன்.
அப்போது மூச்சு விடுவதுக்கு கூட பணம் வசூலிக்கும் ஏஜென்சிகளும் இருந்தார்கள். ஆனால் தற்போது முன்னணி நடிகர்களுடன் நடிக்கிறேன், எனது அளவிற்கு மீறி சம்பாதிக்கிறேன் என்று பூரிப்புடன் பகிர்ந்து கொண்டவர், ஐந்து நிமிட பாடல் காட்சியில் நடனமாட ரூ.2 கோடி சம்பளம் வாங்குவதாக கூறுகிறார்.