நூடுல்ஸ் விரும்பியா நீங்கள்? அதை சாப்பிடுவதால் என்னவெல்லாம் நடக்கும் தெரிஞ்சிக்கோங்க!
நூடுல்ஸ் சாப்பிடுவதால் உடம்பில் ஏற்படும் பிரச்சனைகள் குறித்து பார்க்கலாம்.
நூடுல்ஸ்
நூடுல்ஸ் என்னும் இந்த உணவு பெரும்பாலும் எல்லோருக்கும் பிடித்த உணவு பட்டியலில் ஒன்றாக இருக்கும். வயது வித்தியாசம் இன்றி குறிப்பாக குழந்தைகள் அதிகமாக விரும்பி உண்ணும் உணவாகும். இது பல வகைகளில் சுவைக்கப்படுகிறது அதி ஒரு வகைதான் பதப்படுத்தப்பட்ட 2 நிமிட நூடுல்ஸ்.
இதில் நார்ச்சத்துக்களும் புரோட்டீன்களும் குறைவாக இருப்பதால் இது உடல் பருமனுக்கு வழிவகுக்கும். இதன் சுவைக்கு மயங்கி அடிக்கடி சாப்பிடுவதால் உயர் ரத்த அழுத்தம், தலைவலி மற்றும் குமட்டல், மலச்சிக்கல் போன்றவற்றை உருவாக்கும். மேலும் இதய நோய்க்கு வழிவகுக்கும்.
என்ன நடக்கும்
இதை தொடர்ந்து, மலக்குடல் புற்றுநோய் வர வழிவகுக்கும். நூடுல்ஸில் அதிக கலோரிகள் மற்றும் கொழுப்பு உள்ளது, இது உடல் எடை அதிகரிப்புக்கு வழிவகுக்கும். நூடுல்ஸில் நார்ச்சத்து குறைவாக இருப்பதால், அவை விரைவாக செரிமானமாகி பசியை அதிகரிக்கும்.
நூடுல்ஸில் உள்ள அதிக கலோரிகள் மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் நீரிழிவு நோய்க்கான ஆபத்தை அதிகரிக்கும். இவ்வாறு எண்ணற்ற நோய்களுக்கு வழித்தடம் அமைக்கும் நூடுல்ஸ் உணவை முற்றிலும் தவிர்த்துக்கொள்வது நல்லது என பலர் அறிவுறுத்தி வருகின்றனர்.