நூடுல்ஸ்ஸா.. Never; பிரேக் அப் செய்த காதலி - ஆடிப்போன காதலனின் பெற்றோர்!
எளிய உணவை பரிமாறியதால் பெண் காதலை பிரேக் அப் செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
எளிய உணவு
சீனாவைச் சேர்ந்த 20 வயது மதிக்கத்தக்க இளம்பெண் தனது சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்த போஸ்ட் ஒன்று வைரலாகி வருகிறது. அதில், நான் எனது பாய் ஃபிரெண்டின் பெற்றோரை சந்திக்க ஆவலுடன் இருந்தேன். அதேசமயம் பதற்றமாகவும் இருந்தேன். அவர்களை சந்தித்த பிறகு சாப்பிட என்னை டைனிங் டேபிளுக்கு அழைத்து சென்றார்கள்.
அவர்களோடு சேர்ந்து நானும் உணவருந்த அமர்ந்த போது, அங்கே டேபிளில் ஏற்கனவே பரிமாறப்பட்ட எளிய உணவுகள் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தேன். டேபிளில் வறுத்த முட்டைகளுடன் கூடிய நூடுல்ஸ் 1 கிண்ணம், பூசணி கஞ்சி மற்றும் சில வகை குளிர் உணவுகளை மட்டுமே வைத்திருந்தனர்.
பிரேக் அப்
பாய் ஃபிரெண்டின் பெற்றோர்கள் முதல் சந்திப்பிற்கு ஸ்பெஷல் உணவுகளை ஏற்பாடு செய்வார்கள் என்று எதிர்பார்த்த எனக்கு ஏமாற்றமே மிஞ்சியது. சுவையான உணவு இருக்கும் என நினைத்தேன். எனக்கு நூடுல்ஸ் பிடிக்காது என்று அவனுக்கு தெரியும், ஆனால் ஒவ்வொரு வேளை உணவிலும் ஒரு நூடுல்ஸ் டிஷ் இருந்தது.
இதை பற்றி நான் கேட்ட போது காதலன் சொன்ன பதில் எனக்கு ஆச்சரியமாக இருந்தது. சாமானியர்கள் தினமும் இதை தான் சாப்பிடுவார்கள், என் வீட்டிலும் இதுவே கிடைக்கும் என்றான். இதனை தொடர்ந்து எனக்கு இந்த உறவு சரிப்பட்டு வராது என கூறி விட்டு,
அவனது வீட்டிலிருந்து மூட்டை முடிச்சை கட்டி கொண்டு பிரேக்கப் செய்து கிளம்பி விட்டேன் எனக் குறிப்பிட்டுள்ளார். நெட்டிசன்கள் இதற்கு கமெண்டுகளை குவித்து வருகின்றனர்.