80 கிடா, 2600 கிலோ அரிசி; மூக்கை துளைத்த அசைவ ரசம் - அப்படியென்ன விஷேசம்?
கோவில் திருவிழாவின் கொண்டாட்ட வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.
கோவில் திருவிழா
சிவகங்கையில் பிரசித்தி பெற்ற சாக்கை உய்யவந்தம்மன் கோயில் அமைந்துள்ளது. இங்கு ஆடி மாதந்தோறும் திருவிழா நடப்பது வழக்கம். அதனை முன்னிட்டு சாக்கோட்டை, புதுவயல், கண்டனூர், பெரியகோட்டை,
சாக்கவயல் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து சுமார் 20000 க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர். இதனால், கிட்டத்தட்ட 80 ஆடுகளை பலியிட்டு தங்களின் வேண்டுதல்களை நிறைவேற்றினார்கள்.
அசைவ ரசம்
பிறகு அதனை வைத்து விருந்து ரெடியானது. இந்த திருவிழாவில் விசேஷமே, பூண்டு, சின்ன வெங்காயத்தை உரித்து, உரலிலேயே இடித்து, செய்யப்பட்ட ரசம். மிகப்பெரிய அண்டாகளில் தயாரானது. இதனை அசைவ ரசம் என்கின்றனர்.
அதன்பின், 2600 கிலோ அரிசியை போட்டு சாதம் வடித்து படையலிட்டு அம்மனுக்கு படைத்தனர். இறுதியில் திருவிழாவில் பங்கேற்ற 20000 க்கும் மேற்பட்டவர்களுக்கு அசைவ ரச விருந்து பரிமாறப்பட்டது.
இந்த விருந்து பாரம்பரிய முறைப்படியே சமையல் செய்யப்பட்டது. பாக்கு மட்டை தட்டில்தான், மருத்துவ குணம் கொண்ட அசைவ ரச விருந்து பரிமாறப்பட்டது. சாயங்காலம் தொடங்கி நள்ளிரவு வரை நடைபெற்றது.